இதுவரை பினாங்கில் பிரிமா திட்டம் இடம்பெறவில்லை – திரு ஜெக்டிப்

திரு ஜெக்டிப் சிங் டியோ பிரிமா வீடமைப்புத் திட்டத்தைக் குறித்த நாளிதழ் செய்தியைக் காண்பிக்கிறார்.
திரு ஜெக்டிப் சிங் டியோ பிரிமா வீடமைப்புத் திட்டத்தைக் குறித்த நாளிதழ் செய்தியைக் காண்பிக்கிறார்.

பினாங்கு மாநிலத்தில் மலிவு விலை வீடுகள் ரிம400,000 என அறிவிக்கும் தேசிய முன்னணி தலைவர்களின் கூற்று முற்றிலும் தவறு என்றார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் டியோ. 2008-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை மாநில அரசு ஆட்சியில் குறைந்த மலிவு விலை வீடுகளுக்கு ரிம42,000 மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு ரிம72,500 என நிர்ணயிக்கப்பட்டது. நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் 2008 முதல் 2015 வரை ரிம42,000 மதிப்புக் கொண்ட 8,092 யூனிட் வீடுகளும் ரிம72,500 விலையில் 8,107 யூனிட் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. அதே வேளையில் தேசிய முன்னணி ஆட்சியில் 2001 முதல் 2008 வரை குறைந்த மலிவு விலை வீடுகள் 4,355 யூனிட் வீடுகளும் நடுத்தர மலிவு விலை வீடுகள் 769 யூனிட்கள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே, மாநில அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தின் மீது அவதூறு கூறுவது அர்த்தமற்றது.
மாநில அரசு தொடர்ந்து குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளும் எனத் தெளிப்படுத்தினர் திரு ஜெக்டிப். தேசிய முன்னணி அரசாங்கம் தவறான தகவல் பறிமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும். அதேவேளையில், பினாங்கில் ஒரே மலேசியா வீடமைப்புத் திட்டத்தை(பிரிமா) செயல்படுத்த முற்பட வேண்டும். பினாங்கு பிரிமா வீடமைப்புத் திட்டத்தைப் பற்றி பல தேசிய முன்னணி அரசியல் தலைவர்கள் பல முரண்பாடான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். அண்மையில் பிரிமா திட்டத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ அப்துல் முதாலிப் அலியாஸ் “New Straits Times’ எனும் நாளிதழில் பினாங்கு மாநில பிரிமா திட்டத்தில் 26,261 யூனிட் வீடுகள் கட்டப்படும் என அறிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை எங்களின் பதிவில் இடம்பெறவில்லை என திரு ஜெக்டிப் கூறினார். எனவே, இந்தத் திட்டத்தைக் குறித்து கூடுதல் தகவல் மற்றும் தெளிவுப் பெற பிரிமா தலைவர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் அலியாஸ் அனோர் அப்துல் அவர்களுக்கு கடிதம் அனுப்பியதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
திரு ஜெக்டிப் கருத்துப்படி ” இதுவரை பினாங்கில் ஒரு பிரிமா திட்டம் கூட மேற்கொள்ளவில்லை”. இதுவரை பத்து பிரிங்கில் 1,520 யூனிட் மற்றும் கம்போங் கஸ்தாமில் 1,124 யூனிட் வீடுகள் கட்டுவதற்கான விண்ணப்பம் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன என்றார். மேலும் இத்திட்டத்தை மேற்கொள்ள கூடுதல் ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சணைகளும் தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறினார். கூடிய விரைவில் பினாங்கில் பிரிமா திட்டம் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);