“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் ”
என்ற திருக்குறளுக்கு ஏற்ப கண்ணுடையார் என்பவர் கற்றோராகவும் முகத்தில் இரண்டு புண் உடையவர் கல்லாதவராகக் கருதப்படுவர். அவ்வகையில் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் கலை, கலாச்சாரம் மட்டுமின்றி கல்வியறிவுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி முத்துச்செய்தி நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
இந்து அறப்பணி வாரியம் 2008-ஆம் ஆண்டு முதல் இந்திய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிவருகிறது. கீழ்க்காணும் அட்டவனையில் இப்புள்ளிவிபரங்களைக் காணலாம்.
மேலும், பினாங்கு மாநில அரசின் தொழில்புரட்சி 4.0 ஏற்ப செயல்திறன் அடிப்படையிலான மேற்கல்வி பயிலவும் நிதியுதவு மற்றும் உபகாரச் சம்பளம் கொடுக்கப்பட்டது.
2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பினாங்கு திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் பயிலும் 38 மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டன. இத்திட்டத்திற்கு அறப்பணி வாரியம் ரிம192,355 நிதியுதவி அளித்துள்ளது.
தொழிற்நுட்ப உற்பத்தி துறையில் டிப்ளோமா பயின்ற திரு வெ. சோதிவானனின், 23 ஒரு தவனைக்கான கல்விக் கட்டணத்தை இந்து அறப்பணி வாரியம் ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார். அறப்பணி வாரியம் இக்கல்வி உபகாரச் சம்பளம் வழங்கி தொழிற்கல்வி பயில ஊக்குவித்ததற்கு நன்றிக் கூறினார். தற்போது ஒரு புகழ்ப்பெற்ற தொழிற்சாலையில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். எட்டுக் கல்விக்கும் தொழிற்கல்விக்கும் மிகுந்த வேறுப்பாடு இருப்பதாகவும் கூறினார். மேலும், இக்காலக்கட்டத்தில் பொறியியலாளர் சார்ந்த தொழிற்கல்வி பின்புலம் கொண்ட மாணவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒரு வருடத்திற்கான கல்விக்கட்டணம் செலுத்த உபகாரச் சம்பளம் வழங்கியதாக திரு த. ராகேஷ், 26 தெரிவித்தார். பினாங்கு திறன்கல்வி மேம்பாட்டுக் கழகத்தில் தொழிற்நுட்ப உற்பத்தி துறையில் சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பட்டம் பெற்றதாக மேலும் தெரிவித்தார். தனித்து வாழும் தனது தாயாருக்கு அறப்பணி வாரியத்தின் உபகாரச் சம்பளம் கிடைக்கப்பெற்றதால் பெரும் உதவியாக இருந்ததாகக் கூறினார். தற்கோது தொழில்நுட்பவியலாளராக வேலைச் செய்வதாகக் கூறினார். அறப்பணி வாரியத்தின் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டத்தால் பல இந்திய மாணவர்கள் நன்மை அடைகின்றனர். அதோடு கல்விகேள்விகளில் சிறந்து திகழ்வதற்கும் தூண்சுகோளாக அமைகிறது என குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில அரசு 2009 முதல் 2017-ஆம் ஆண்டு வரை தமிழ்ப்பள்ளி, பஞ்சாபி பள்ளி, தமிழ்ப் பாலர்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழுவிற்கு வருடாந்திர நிதி ஒதுக்கீடாக ரிம17.09 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.