பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துடன் பொது விவாதம் செய்ய விடுத்த அழைப்பினை மலேசிய இந்தியர் காங்கிரஸ்(மஇகா) ஏற்காதது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக அறப்பணி வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி திரு இராமசந்திரன் கூறினார். அண்மையில் ஆர்டிஎம் மற்றும் உள்நாட்டு நாளிதழில் இந்து அறப்பணி வாரியம் பினாங்கில் உள்ள ஆலயங்களை அகப்பறிக்க முற்படுவதாகவும் வெளிவந்த செய்தியை தொடர்ந்து அறப்பணி வாரியம் பினாங்கு மஇகாவுடன் பொது விவாதம் நடத்த எண்ணம் கொண்டது.
“மஇகா இந்து அறப்பணி வாரியம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் விளையாட்டு வேண்டாம்” என திரு இராமசந்திரன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இந்து அறப்பணி வாரியம் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
* அருள்மிகு பாலதண்டாயுபாணி ஆலயம், பத்து கவான், ஶ்ரீ செல்வ விநாயகர் இந்து பரிபாலன தேவஸ்தானம், பிறை, திரெளபதி அம்மன் ஆலயம் நிபோங் திபால் ஆகிய மூன்று ஆலயங்களும் சூழ்ச்சியின் பேரில் கைப்பற்றப்பட்டன.
* ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக சாக்குப்போக்குக் கூறி அதன் அதிகாரத்தினால் கைப்பற்றுதல்.
*பினாங்கு உயர் நீதிமன்றம் ஆகஸ்டு11-ஆம் திகதி அறிவித்த தீர்ப்பில் அறப்பணி வாரியத்திற்கு ஆலயங்களை நிர்வகிக்க எந்த உரிமையும் கிடையாது.
மஇகா சுமத்திய மேற்கண்ட அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் செய்தியாளர் கூட்டத்திற்கு வருகையளித்த அரசு சாரா இயக்கங்களுக்கும் நிருபர்களுக்கும் வழங்கப்பட்டன. பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மஇகா மற்றும் மஇகா தொடர்புக் குழுத் தலைவர் திரு தங்கவேலு மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பிரச்சனைக் குறித்து சட்ட செயல்முறைக்கு விட்டு விட்டோம், என மேலும் கூறினார்.var d=document;var s=d.createElement(‘script’);