இந்து அறப்பணி வாரியம் வழங்கும் உபகாரச் சம்பளம்

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுக்கோளாகத் திகழ்கிறது. அவ்வகையில் இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாவது முறையாகத் தொடர்ந்து உபகாரச் சம்பளம் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளம் பெறுவதற்கு பினாங்கு இந்திய மாணவர்கள் வரும் 26/2/2015 முதல் 1/4/2015 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பப்பாரங்களை இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.hebpenang.gov.my எனும் அறப்பணி வாரிய அகப்பக்கத்தின் வழி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். கடந்த ஆண்டு உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. விண்ணப்பதாரர்கள் சரியான விபரங்களை கொண்டு விண்ணப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
சான்றிதழ், டிப்ளோமா, இளங்கலை ஆகிய மேற்கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர். தேர்வுப்பெற்ற ஒவ்வொரு மாணவரும் அவரவரின் கல்வித் தகுதிக்கேற்ப உபகாரச் சம்பளம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு பினாங்கு திறன் மேம்பாட்டு மையத்தில்(PSDC) மேலும் அதிகமான இந்திய மாணவர்கள் செயல்திறன் கல்வியை பயில அனுமதிக்கப்படுவர் என்றார்.
இந்து அறப்பணி வாரியம் மாநில அரசு வழங்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி மாணவர்களின் கல்வி சுமையைக் குறைக்க வழங்குகின்றனர் என்றால் மிகையாகாது. கடந்த ஆண்டு 436 இந்திய மாணவர்களுக்கு ரிம587,475 வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்து அறப்பணி வாரியம் அதிகமான மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இவ்வாண்டு ரிம210,696.50 நிதித்திரட்டப்பட்டத்தோடு 183.81 gms எடைக்கொண்ட தங்கம் காணிக்கையாகச் செலுத்தப்பட்டது என கணக்கறிக்கை காட்டினார் மதிப்பிற்குரிய துணை முதல்வர் அவர்கள்.

அட்டவனை: 2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரை இந்து அறப்பணி வாரியம் வழங்கிய உபகாரச் சம்பளம்

ஆண்டு

தொகை (ரிம)

மாணவர்கள் எண்ணிக்கை

2008

2125

2009

5810

2010

109 253

39

2011

227 000

149

2012

243 100

268

2013

345 900

315

2014

587 474

436

இந்து அறப்பணி வாரியம்
இந்து அறப்பணி வாரியம்