இன்வெஸ்ட் பினாங்கு மையம், ‘பினாங்கு தயாரிப்பு: கோவிட்-19 எதிர்கொள்ளும் வியாபாரம்’ (Made in Penang: Pitching in to fight Covid-19) என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் வெளியிடுகிறது. இதன் மூலம் இம்மாநிலத்தில் தொற்றுநோயை எதிர்கொள்ள உள்ளூர் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
இந்த மையம் பினாங்கில் டெக்ஸெம் ரெசொர்சஸ் துணை நிறுவனமான டெக்ஸெம்-பேக் முதன்முதலில் அங்கீகரிக்கப்படுகிறது.
டெக்ஸெம்-பேக் என்பது ஒரு பாலிமர் பொறியியல் தீர்வுகள் வழங்கும் நிறுவனமாகும். இது பல்வேறு துறைகளில் குறிப்பாக தரவு சேமிப்பு, ‘செமிகொன்டாக்டர்’ இருந்து மருத்துவம், துல்லியமான உபகரணங்கள் மற்றும் விண்வெளித் தொழில்கள் வரை வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குகிறது.
உலகளவில் அதிகரித்து வரும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (பி.பி.இ) பற்றாக்குறை டெக்ஸெம்-பேக்கை அதன் தொழில்நுட்ப திறன்களையும், வளங்களையும் கொண்டு ‘டெக்ஸ்-ஷீல்ட்’என்ற முகக் கவசத்தைத் தயாரிக்க தூண்டியுள்ளது.
டெக்ஸ்-ஷீல்ட் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது நோன்-ஸ்திரில் அற்ற ஒரு முறை பயன்படுத்தப்படும் முகக் கவசமாக, வேலை இடங்களில் முகப் பாதுகாப்பிற்கும்; கிளினிக் பயன்பாட்டிற்கும் மற்றும் சில்லறை மருந்தகங்களில் பயன்பாடுகளுக்கும் (அறுவை சிகிச்சை பயன்பாடுகளைத் தவிர) பயன்படுத்தக்கூடும்.
அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் (எம்.ஐ.தி.ஐ) டெக்ஸ்-ஷீல்ட் அத்தியாவசிய பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (எம்.சி.ஒ) போது இந்நிறுவனம் உற்பத்தி உரிமத்தை பெற்றுள்ளது என்றும் அறியப்படுகிறது.
மூன்று வாரங்களுக்குள், டெக்ஸெம்-பேக் நிறுவனம் திட்டமிட்டு, வடிவமைத்து, புதிய ‘டை செட்’-களை தயாரித்து, பயன்பாட்டில் இருக்கும் இயந்திரங்களை மறுகட்டமைப்பு மேற்கொன்டு குறைந்தபட்ச செலவில் அதன் உற்பத்தி இடத்தை தயார் செய்து ஒரு நாளைக்கு 10,000 டெக்ஸ்-ஷீல்ட் கவசங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கியது.
1979-ல் நிறுவப்பட்ட டெக்ஸெம்-பேக் துணை நிறுவனம் AS9100D, ISO9001 மற்றும் ISO14001 ஆகிய அங்கீகாரங்கள் பெற்றள்ளன. கோவிட் -19 க்கு எதிரான போரில் தேவைப்படும் தயாரிப்புகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு ‘பினாங்கு தயாரிப்புகள்’ என்ற தலைப்பிலான கட்டுரைகளுக்கு காத்திருங்கள்.