இரண்டு பழைய பீரங்கிகளின் கண்டுபிடிப்பு ‘ஃபோர்ட் கார்ன்வால்ஸ்’ வரலாற்றை மாற்றியமைக்கலாம்- ஆராய்ச்சியாளர்

Admin

சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக நம்பப்படும் இரண்டு பீரங்கிகள் வரலாறு புகழ்ப்பெற்ற ஃபொர்ட் கொன்வாலிஸ் கண்டுப்பிடிக்கப்பட்டதை பினாங்கு மாநில தொல்பொருள் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் மொக்தார் சயிடின் உறுதிப்படுத்தினார். கோட்டை அருகே கால்வாய் தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருக்கும்போது இந்தப் பீரங்கிகள் 1.2மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், இதுநாள் வரை அமைதியான கோட்டை என்று வர்ணயிக்கப்பட்ட இந்த ஃபோர்ட் கொன்வாலிஸ் பகுதியின் வரலாற்றில் மாற்றம் ஏற்படலாம் என தெளிவுப்படுத்தினார்.

2.35மீட்டர் மற்றும் 2.2மீட்டர் நீளம் கொண்டுள்ள இந்த இரண்டு பீரங்கிகளில் ‘GR’ எனும் எழுத்து கொண்டுள்ளதால் இது கோர்ஜ் அரசர் III (1760 – 1820) ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த பீரங்கிகள் பற்றிய மேல் விபரங்களை கண்டறிய மலேசிய அறிவியல் பல்கலைகழக ஆய்வகத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக டாக்டர் மொக்தார் தெரிவித்தார்.

பினாங்கு மாநில முதல்வர் அவ்விடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் இது பினாங்கிற்கு சீனப்பெருநாள் கொண்டாட்டத்தில் கிடைத்த இரண்டு பரிசுகள் என அகம் மகிழ வர்ணித்தார்.