பிறை – தாமான் இந்திராவாசே சமூக பாதுகாப்பு & முன்னேற்ற கழகம், பினாங்கு மாநில தன்னார்வலர் துறை கெபாலா பத்தாஸ் மருத்துவமனையுடன் இணைந்து இந்த ரத்த தானம் முகாமை மெகா மால் பேரங்காடியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் பொது மருத்துவமனையின் இரத்த வங்கியை நிரப்புவதே ஆகும். ஏனெனில்,கொண்டாடவிருக்கும் பெருநாள் காலங்களில் அதிகமான சாலை விபத்துகள் நிலவும் என்பதால் இரத்த பயன்பாடு அவசியமாகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்த தானம் முகாம் நடத்தப்படுவதாக பேராசிரியர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில், பொதுமக்கள் இடையே ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மேலோங்க இம்மாதிரியான முகாம்கள் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். விழாக் காலங்களில் சாலை விபத்துகள் ஆங்காங்கே அதிகமாக நடைபெறுவதால் உயிர்களை காப்பாற்றும் முன்னேற்பாடாக ரத்த வங்கியை நிரப்புகின்றனர். மேலும், பினாங்கு வாழ் மக்களிடையே ஆரோக்கிய வாழ்வின் முக்கியதுவத்தை மேம்படுத்தும் வகையில் இம்மாதிரியான் நிகழ்வுகள் முன்னோடியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தாமான் இந்திராவாசே சமூக பாதுகாப்பு & முன்னேற்ற கழகத் தலைவர் டத்தோ எங் உய் லாய் கலந்து கொண்டார்.
இம்முறை ஏறக்குறைய 150 பேர் ரத்த தானம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றும் இரத்த தானம் முகாமில் கிடைக்கப்பெற்ற நல்ல வரவேற்பில் மீண்டும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.