இளைஞர்கள் சஷீலாதேவியின் சாதனையைப் பின்பற்ற வேண்டும் – சூன் லிப் சீ

ஆள்காட்டி விரலால் வாகனத்தை இழுக்கும் சஷீலாதேவி

ஜோர்ச்டவுன் ஆள்காட்டி விரலால் வாகனத்தை இழுத்து மலேசிய சாதனைப் புத்தகப் பதிவேட்டில் சாதனைப் படைத்தார் 27 வயது நிரம்பிய இராணுவ வீராங்கனை இ.சஷீலாதேவி. 2.7 டன் எடையுடைய தோயோத்தா அல்பார்ட் ரக வாகனத்தை தனது ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி 1.25 நிமிடத்தில் 70.2 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று சாதனைப் படைத்தார்.

சஷீலாதேவியின் சாதனையை நேரில் வருகையளித்து பாராட்டினார்

இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ. மேலும், இந்த யுவதியைப் போல் அனைத்து இளைய தலைமுறையினரும் விடாமுயற்சியுடன் அனைத்து விவகாரங்களிலும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அனைவரும் ஒவ்வொரு சவால்களையும் விடாமுயற்சியுடனும் திறந்த மனப்பான்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும். இலக்குடன் ஒரு விவகாரத்தில் செயல்படும் போது வெற்றி பெறுவது உறுதி,” என செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்நிகழ்வு பினாங்கு ஒரின் பிட்னஸ்‘, இராணுவப்படை சமூகநலன் விளையாட்டுக் கழகம் இணை ஏற்பாட்டிலும் மாநில அரசு மற்றும் பினாங்கு மாநகர் கழக ஆதரவுடன் இனிதே நடைபெற்றது.

சஷீலாதேவி 10 வருடங்களுக்கு முன்பு (2008) 41டன் எடையுடையப் பொருளை இரண்டு விரல்களைக் கொண்டு 4 வினாடிகளில் தூக்கி சாதனைப் படைத்தார் என்றால் மிகையாகாது. இந்த வீராங்கனை இரண்டாவது முறையாக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது பாராட்டக்குறியது.

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதை எண்ணி அகம் மகிழ்வதாகவும் எதிர்காலத்தில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற இலக்கு கொண்டுள்ளதாகவும், ‘ சஷீலாதேவி தெரிவித்தார். அதோடு 14 வயது முதல் எடை தூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.