பினாங்கு மாநிலத்தில் வாழும் உடல்பேறு குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் கொம்தாரில் கட்டிடத்தில் இலகுவாக பயணிக்க பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திற்குப் பல பரிந்துரைகளை முன் வைத்தார் புலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் யாப் சூ உய்.
முதலாவதாக, கொம்தார் கீழ் தளத்தில் மட்டும்தான் சக்கர நாற்காலி செல்வதற்குப் பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், கொம்தார் மூன்றாவது மாடியில் இப்பிரத்தியேக பாதை அமைக்கப்படவில்லை. கொம்தாரில் கட்டிடத்தில் அதிகமான அரசு அலுவலகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, உடல் ஊனமுற்றோர் கொம்தாரில் இருக்கும் அரசு அலுவலகங்களுக்குச் செல்வதற்கு மூன்றாவது மாடியிலும் சிறப்புப் பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே, கொம்தார் மலாயன் வங்கிக்கு முன்புறம் இருக்கும் பல்நோக்கு வாகனம் நிறுத்தும் இடத்தில் இரண்டாம் மாடியில் உள்ள உடல்பேறு குறைந்தவர்களின் வாகன நிறுத்தும் இடத்தில் அவர்களுக்கென சரிவுப்பாதை அமைக்கப்படவில்லை. இந்த வாகனம் நிறுத்தும் இடத்தை மூன்றாவது மாடிக்கு மாற்றியமைத்தால் அவர்கள் கொம்தாரில் அமைந்துள்ள அலுவலகங்களுக்கு இலகுவாக செல்ல இயலும்.
பினங்கு மாநில அரசு உடல்பேறு குறைந்தவர்களின் வசதிக்குப் பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது. இம்மாதிரியான மாற்றங்களின் வழி அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர்