பினாங்கு மாநிலத்தில்’உணவை முழுமையாக உண்ணவும்” என்ற பிரச்சாரத்தை (Kempen Makan Sampai Habis) பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்களிடையே உணவின் முக்கியத்துவத்தையும் அதனை விணாக்காமல் சாப்பிடும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ஏற்பாடுச் செய்யப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
நம் நாட்டில் தற்போதைய காலக்கட்டத்தில் அளவுக்கு அதிகமான உணவு பொருட்கள் குப்பை தொட்டிகளில் வீசப்படுகின்றன. ஆனால், ஒரு சில வெளிநாடுகளில் உணவு கிடைக்கப்பெறாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை மாண்டு வருவதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றது. உணவு பற்றாக்குறை இல்லாத நம் நாட்டில் வீணாக்கப்படும் உணவு வகைகளை கட்டுப்படுத்தவே இப்பிரச்சாரம் துவக்க விழாக் காண்கிறது எனக் கூறினார் மாநில முதல்வர். அதோடு, “கார்பன்” வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் பினாங்கை தூய்மை, பசுமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக உருவாக்குவதை உறுதிச்செய்ய இப்பிரச்சாரம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
‘உணவை முழுமையாக உண்ணவும்” எனும் பிரச்சாரத்தில் அனைத்து பினாங்கு வாழ் மக்களும் கலந்துகொள்ள அழைக்கப்படுவதாக பொதுநல மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டின் திட கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகத்தின் புள்ளி விவரம்படி மலேசியவில் ஒருநாளில் 8 கோடி எடைக்கொண்ட உணவு பண்டங்கள் அதாவது சராசரிக்கு 6 கோடி மக்கள் உண்ணும் உணவுகள் குப்பைகளில் வீசப்படுவதாகக் கூறினார். எனவே, இதனைக் குறைக்கும் நோக்கத்தில் பினாங்கு மாநில அரசு முழுமூச்சாக இப்பிரச்சாரத்தை அமல்படுத்துகிறது என்றார். எனவே, பினாங்கு மாநிலத்தில் ஆங்காங்கே “roadshow” நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);