இந்நாட்டில் தொழிலாளர் சந்தை மற்றும் மலேசிய புள்ளியல் துறை கடந்த பிப்ரவரி மாதம் 2016 வரை 506,400 வேலையற்றோர் இடம்பெறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில் பினாங்கு மாநிலத்தில் ஏறக்குறைய 3,800 வேலையற்றோர் (2015) இருப்பதாக மலேசிய புள்ளியல் துறை அறிவித்தது. வேலையற்றோர் எண்ணிக்கை விகிதம் அதிகரிப்பதற்கு புதிய வேலை தேடல் சிரமமாக அமைவதோடு இளம் தலைமுறையினர் வேலையை அதிகமாக தேர்தெடுக்கும் அணுகுமுறையும் காரணமாக அமைகிறது என புலாவ் பெதோங் சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த கேள்விக்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தொகுப்புரையில் பதிலளித்தார்.
பினாங்கு மாநில அரசு “Penang Accelerator for Creative, Analytics & Technology” எனும் திட்டத்தின் வழி சிறுதொழில் வியாபாரிகள் தொழிலதிபர்களாக உருமாற்றம் பெற வழிகாட்டப்படுகின்றனர். மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் மக்கள் சமத்துவக் கடனுதவித் திட்டம் அறிமுகப்படுத்தி சிறுதொழில் வியாபாரிகள் தொழில் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பினாங்கு தொழில்திறன் கழக உதவியுடன் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் நோக்கத்தில் மனித வளத்தை மேம்படுத்தப்படுகிறது எனக் கூறினார் பேராசிரியர். மேலும் தற்போது தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகமான மனித வளம் தேவைப்படுகிறது என சட்டமன்ற கூட்டத்தொடரில் சுங்கை டூவா சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
பத்து காவான் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஏறக்குறைய 1,032 ஏக்கர் நிலம் 100 மின் மற்றும் முன்னனு சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு ரிம7.5பில்லியன் முதலீடுச் செய்வதோடு 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிட்டும் என அறிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர். இப்பகுதியில் வடிவமைப்பு தொழிற்சாலை மட்டுமின்றி உணவு தயாரிக்கும் நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், மற்றும் பல நிறுவனங்கள் நிர்மாணிக்கப்படும் என பெனாந்தி சட்டமன்ற உறுப்பினருக்கு தொகுப்புரையில் பதிலளித்தார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);