பத்து லஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினரும் சுற்றுப்பயண ஆட்சிக் குழு உறுப்பினருமான லாவ் ஹெங் கியாங் பொருளாதார நலிவுற்ற பொது மக்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். அண்மையில் இங்கு ஜாலான் பேராக்கில் வசிக்கும் திருமதி பி.யசிந்தர் என்ற விதவைத் தயாருக்கு திரு லாவ் ரி.ம2500 பெருமானமுள்ள காசோலையை வழங்கி உதவினார்.
இம்மாது பகல் வேளையில் பாதுகாவலராகவும் இரவு வேளையில் துணி தைத்துத் தன் குடும்பத்தைப் பராமரித்து வருகிறார். எனவே, இப்பணம் அவர் தையல் இயந்திரத்தை வாங்கித் தனது அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்கு ஓர் உந்துதலாக அமையும் என திரு லாவ் ஹெங் கியாங் வலியுறுத்தினார். இம்மாதுவின் கணவரான திரு பல்வின்டர் சிங் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டதாகக் கூறினார். மேலும், தனது மூன்று ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தை உடல் ஊனமுற்றது என்றும் அக்குழந்தையை அவரின் பிற இரு பிள்ளைகளே கவனித்துக் கொள்கின்றனர் என்றார். பி.யசிந்தரின் இளைய மகனான முல்கிட் சிங் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ‘கே எஃப் சி’ சாப்பிடுவதும், சினமாவிற்கு செல்வதும் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தான். இம்மாது பாதுகாவலராகப் பணிப்புரிந்து ரி.ம 1000-ஐ மாதாந்திர வருமானமாகப் பெறுகிறார். இருப்பினும், அவ்வருமானத்தில் ரி.ம 310-ஐ வீட்டு வாடகைச் செலுத்துவதாகக் கூறினார்.
ஆகவே, லாவ் ஹெங் கியாங் இந்நிதியினை பி.யசிந்தருக்கு வழங்கி அவரை வீட்டிலிருந்த வண்ணம் வேலை செய்து பணம் ஈட்டுவதற்கு வழிவகுத்துள்ளார். செய்தியாஅளர்களிடம் பேசிய லாவ் ஹெங் கியாங் தாம் தனித்து வாழும் தாய்மார்கள், ஆதரவற்றோர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு உதவிக் கரம் நீட்டத் தயார் என எடுத்துரைத்தார். இந்த ஐந்து வருட காலக்கட்டத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளதாகக் கூறினார். மூன்று குழந்தைகளுக்குத் தாயான பி.யசிந்தருக்கு ஏதோ ஒரு வகையில் உதவ எண்ணம் கொண்டுள்ள நல்லுள்ளங்கள் கீழ்க்காணும் எண்களில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.
திருமதி பி.யசிந்தர்- 0125479232
திருமதி யசிந்தர் தன் இரு குழந்தைகளுடன்பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர்
திரு லாவ் ஹெங் கியாங்கிடமிருந்து காசோலையைப் பெற்றுக் கொள்கிறார்.