அண்மையில் மிக கோலாகலமாக நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலப்பு பூப்பந்து பிரிவுக்கான இறுதிப்போட்டியை கெர்னி பராகோன் பேரங்காடியில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், அரசியல் தலைவர்கள் பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெள்ளித்திரையின் வழி பார்வையிட்டனர். இறுதிப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் இப்பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்றால் ரிம 100,000 வெற்றி மானியம் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
கலப்பு பூப்பந்து இரட்டியர் பிரிவில் பினாங்கு விளையாட்டு வீரரான சாங் பெங் சூன் மற்றும் மலாக்காவை சேர்ந்த கோ லியூ இங் ஆகியோர் இந்தோனேசியா விளையாட்டாளர்களை எதிர்த்து கலம் இறங்கினர். இதில் 21-12, 21-14 என இரண்டு செட்களிலும் இந்தோனேசியா அணி வென்று வாகை சூடியது. மலேசிய அணியினர் வெள்ளி பதக்கம் வென்று வாகை சூடினர். நள்ளிரவில் முடிவடைந்த அப்போட்டியினை 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் மலேசியா வெள்ளி பதக்கம் வென்றிருந்தாலும் மலேசியர்கள் பார்வையில் ஹீரோக்களே”, என வர்ணித்தார். மாநில அரசு வாக்குறுதி வழங்கியப்படி பினாங்கு விளையாட்டாளர் சாங் பெங் சூனுக்கு ரிம 100,000 வழங்குவதாகக் குறிப்பிட்டார்.இனம், மொழி பேதமின்றி மலேசியர்கள் என்ற உணர்வில் அனைத்து இன மக்களும் ஒன்றுமையாக ஒலிம்பிக் பூப்பந்து போட்டியை கண்டுகளித்தது பினாங்கு மாநில ஒற்றுமையை பிரதிபலிக்கின்றது என குறிப்பிட்டார் முதல்வர்.
பூப்பந்து ஆண்கள் இரட்டையர் பிரிவு, பூப்பந்து ஆண் ஒற்றையர் பிரிவுகளில் மலேசிய அணி இறுதிச்சுற்று வரை சென்று போட்டியிட்ட வேளையில் அவ்விரண்டிலும் வெள்ளி பதக்கத்தை நம் விளையாட்டாளர்கள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.} else {