பல ஆண்டுகளாக நிலப் பிரச்சனையை எதிர்நோக்கி வரும் கம்போங் மெயின் ரோட் மக்களுக்கு உதவும் நோக்கில் பிறை சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக முயற்சியில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு.ஶ்ரீ சங்கர் பிறை சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இத்தோட்டம் தொடர்பாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை அதற்கான தீர்வுகள் கொண்டுவர முடியாமல் இருப்பதற்கு அவ்வட்டார மக்களின் ஒத்துழைப்பின்மையும் ஒரு காரணமாக அமைவதாக மேலும் அவர் குறிப்பிட்டார். பத்து பேர் அடங்கிய இந்த பணிக்குழுவில் அத்தோட்ட மக்கள் மற்றும் பிறை சமூக முன்னேற்றம் & மேம்பாட்டுக் கழக உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்
இப்பணிக்குழு மத்திய செபராங் பிறை அலுவலத்துடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடி இந்நிலப் பிரச்சனைக்கு தகுந்த தீர்வைக் காண இணக்கம் கொண்டுள்ளது.. எனவே, கம்போங் மெய்ன் ரோட் வட்டார குடிமக்கள் இப்பணிக்குழுவிடம் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி இந்நிலப்பிரச்சனைக்கு தீர்வுக்காண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதனிடையே, மாநில அரசு பல தோட்டப்புற மக்களின் பிரச்சனைக்கு நல்ல தீர்வு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அண்மையில் பைராம் தோட்ட மக்களுக்கு மலிவு விலை வீடு, ஆலயம் மற்றும் தமிழ்ப்பள்ளி இடமாற்றத்திற்கு நிலம் வழங்கி அதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியது என்றால் மிகையாகாது.