செபராங் பிறை – அண்மையில் பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஆதரவோடு தென் செபராங் பிறை இந்தியர் காற்பந்து கழக ஏற்பாட்டில் கிட்டு கிண்ணக் காற்பந்து போட்டி நடைபெற்றது.
“பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் கீழ் 18 காற்பந்து கழகங்கள் இடம்பெறுகின்றன. அதில் தென் செபராங் பிறை கழக ஏற்பாட்டில் கடந்த ஐந்து ஆண்டிகளாக இந்த கிட்டு கிண்ணப் போட்டி நடத்தப்படுகிறது,” என்று பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் தலைவர் ஶ்ரீ சங்கர் தெரிவித்தார் .
இப்போட்டி மலேசிய இந்தியர் காற்பந்து [மீபா] ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் டத்தொ கே பத்மநாதன் கிண்ண காற்பந்து போட்டிக்கான சிறந்த விளையாட்டாளர்கள் தேர்வுச்செய்யும் களமாக இப்போட்டி திகழ்கிறது. மேலும் தொடக்கத்தில் தென் செபராங் பிறை கழக விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கு ஆதரவும் அர்ப்பணிப்பும் வழங்கிய காற்பந்து விளையாட்டாளர் அமரர் கிட்டு அவர்களை நினைவுக்கூறும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.
இப்போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய 25 ஆட்டக்காரர்களை தேர்வுச் செய்து அவர்களுக்கு முழுமையான பயிற்சி வழங்கி இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேசிய ரீதியிலான போட்டியில் பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதித்துச் செல்வர் என்றார்.
இந்த போட்டியில் பிறை யுனிவேர்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தையும் ரிம500 ரொக்கத்தையும் தட்டிச்சென்றது .இறுதி ஆட்டத்தில் பிறை யுனிவேர்ஸ் கிளப் செபராங் பிறையைச் சேர்ந்த மை வோல்ர்ஸ் கிளப்பை வீழ்த்தி வாகை சூடியது .இரண்டாவது இடத்தை பிடித்த செபராங் பிறை கிளப் ரிம300-ஐ வென்றது.
செபராங் பிறை திடலில் நடைபெற்ற இப்போட்டியில் 12 கிளப்புகள் பங்கேற்றன .இப்போட்டியில் மூன்றாவது இடத்தையும் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த கடாரம் எப் சி குழுவினரும் பட்டர்வொர்த்தை சேர்ந்த சூரியன் எப் சி நான்காவது இடத்தையும் பிடித்தனர் .
இப்போட்டியில் ஒன்பது கோல்களை அடித்த யுனிவெர்செல் வீரர் நவீன் யோகேந்திரன் சிறந்த பந்து காவலர் விருதையும் சிறந்த ஆட்டக்காரர் விருதை இதே கிளப்பை சேர்ந்த யாஸ்விந்திராவும் பெற்றனர் .