பாயா தெருபோங், ஆயர் ஈத்தாம் முக்கிம் 13-ல் வசிக்கும் 25 குடும்பங்கள் அந்த குடியிருப்புப் பகுதியை விட்டு வெளியேறும் படி ‘HS Realty Sdn Bhd’ என்ற மேம்பாட்டு நிறுவனம் நோட்டிஸ் வழங்கியுள்ளது.
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் மற்றும் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன் ஏற்பாடு செய்த சந்திப்புக் கூட்டத்திற்கு 50-க்கும் மேற்பட்ட பாயா தெருபோங் குடிமக்கள் கலந்து கொண்டு உதவி நாடினர்.
பொது மக்களின் அவலநிலையைக் கண்ட திரு ராம் கர்பால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் அடுத்த வாரம் (நவம்பர் 16) தனது அலுவலகத்தில் சந்திக்குமாறு ஆலோசனை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்ட தாம் தயார் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
‘HS Realty Sdn Bhd’ நிறுவனத்திற்கு கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலையை தெரிவித்து அடுத்த கட்ட நடவடடிக்கை பற்றியும் பதில் நோட்டிஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்.