குவார் கெப்பா தொல்லியல் பாரம்பரியக் காட்சியகம் இந்த ஆண்டின் இறுதியில் திறக்கப்படும்

Admin
whatsapp image 2024 05 14 at 11.30.15

பினாங்கு துங்கால் – வட செபராங் பிறை அருகே உள்ள குவார் கெப்பா தொல்லியல் பாரம்பரியக் காட்சியகத்தின் கட்டுமானம் 98 விழுக்காடு முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் பொது மக்களுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் கூறுகையில், பாரம்பரியக் காட்சியகம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்ல, தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் புதிய சுற்றுலாப் பயணத்திற்கான முக்கிய ஈர்ப்பாகவும் திகழும்.

மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பினாங்கு முதலமைச்சர் வாரியம் (CMI) குவார் கெப்பாவில் 41 மனித எலும்புக்கூடுகளைக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு, தேசிய பாரம்பரியத் துறை (MOTAC) மற்றும் வெளியுறவு அமைச்சு (KLN) ஒத்துழைப்புடன் முன்முயற்சி எடுத்துள்ளது. அவை தற்போது நெதர்லாந்தின் சேகரிப்பு மையத்தில் (CCNL) வைக்கப்பட்டுள்ளன.

பெலாண்டா அரசாங்க கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் அமைச்சின் மூலம் மலேசியாவிற்கு, குறிப்பாக பினாங்கிற்கு பாரம்பரிய பொருட்களின் முக்கியத்துவத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, எலும்புக்கூடுகளை மலேசிய அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்க ஒப்புக்கொண்டது.

இந்த மையம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு இறுதியில் நிறைவுப்பெற்று பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் அருகிலுள்ள பாரம்பரிய காட்சியகத்தின் கட்டுமான இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

குவார் கெப்பா தொல்பொருள் பாரம்பரியக் காட்சியகத்தின் கட்டுமானத்தில் குவார் கெப்பாவின் அனைத்து கலைப்பொருட்கள் மற்றும் எலும்புக்கூடுகளைக் காட்சிப்படுத்துவதையும் பினாங்கு மாநிலத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை கௌரவப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஹோன் வாய் கூறினார்.

“2017-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த பொக்கிஷம் முக்கியத்துவம் வாய்ந்தது. 5,000 ஆண்டுகளுக்கும் மேலான ” Penang Women (GK2017)” என்று அழைக்கப்படும் குவார் கெப்பா மனித எலும்புக்கூடு இந்த மையத்தில் முக்கிய கண்காட்சியாக இடம்பெறும்.

whatsapp image 2024 05 14 at 11.30.20 (1)

“மேலும், குவார் கெப்பாவில் கண்டெடுக்கப்பட்ட 42 தனி மனித எலும்புக்கூடுகளுடன் “Penang Women” மற்றும் 41 எலும்புக்கூடுகள் உட்பட P.V வான் ஸ்டெய்ன் காலென்ஃபெல்ஸின் (1936) அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன. அவை இப்போது நெதர்லாந்தின் லைடனில் வைக்கப்பட்டுள்ளன. பின்னர் இங்கு கொண்டு வரப்படும்,” என்றார்.

தொல்பொருள்-கல்வி-சுற்றுலா என்ற கருத்தாக்கத்துடன் இரண்டு மாடி பாரம்பரிய கோணத்தில் ஒரு கண்காட்சி இடமாகவும் ஒரு கருத்தரங்கு கூடம், நிர்வாக இடம் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் போன்ற கூறுகள் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

“இந்த மேம்பாட்டுக் கூறுகளில் உள்ளூர் சமூகப் பொருளாதார அம்சங்களைக் கருத்தில் கொண்டு கஃபேக்கள் மற்றும் நினைவுப் பரிசு கியோஸ்களும் இடம்பெறும்.

whatsapp image 2024 05 14 at 11.30.21

“இந்தக் கண்காட்சி மையம் எலும்புக்கூடுகள் மற்றும் தொல்பொருள் கலைப்பொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையமாக மாறுவதை உறுதி செய்வதற்காக, ஒரு ஆராய்ச்சி ஆய்வக அறை மற்றும் கலைப்பொருட்கள் அல்லது எலும்புக்கூடுகளுக்கான சேமிப்பு அறை ஆகியவை வழங்கப்படுகின்றன,” என்று வோங் மேலும் கூறினார்.