கூட்டரசு அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – திரு ஜெக்டிப்

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ மற்றும்  டத்தோ கெராமாட் பகுதியில் வாழும் பொது மக்கள், கூட்டரசு அரசிடம் "நிதி ஒதுக்கீடு ரிம405 லட்சம் எங்கே" எனக் கேள்வி எழுப்பினர்.
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ மற்றும் டத்தோ கெராமாட் பகுதியில் வாழும் பொது மக்கள், கூட்டரசு அரசிடம் “நிதி ஒதுக்கீடு ரிம405 லட்சம் எங்கே” எனக் கேள்வி எழுப்பினர்.

11-வது மலேசிய திட்டத்தில், பினாங்கு மாநில வெள்ள நிவாரணப் பிரச்சனைக்கும் கால்வாய் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் ரிம805 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கூட்டரசு அரசாங்கம் இன்று வரை அந்நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் டியோ.
கூட்டரசு அரசு அறிவித்திருந்த ரிம805 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 7 மேம்பாட்டுத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. அவற்றுள் சுங்கை பினாங்கு, சுங்கை ஜூரு, சுங்கை ஜாவி, சுங்கை பிறை, பாயான் லெப்பாஸ், மத்திய செபராங் பிறை மற்றும் சுங்கை கெச்சில் ஆகிய பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டம் காணவிருந்தது.

பினாங்கு மாநிலத்தில் குறிப்பாக டத்தோ கெராமாட் பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது எனச் சுட்டிக்காட்டினார் ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஜெக்டிப் சிங் டி யோ. 9 மற்றும் 10-அவது மலேசிய திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரிம150 லட்சம் சுங்கை பினாங்கு ஆறு பகுதியில் முதல் கட்ட மேம்பாட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது கட்ட வெள்ள நிவாரண மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரிம450 லட்சம் இன்று வரை கிடைக்கப்பெறவில்லை என்பதால் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹாஜி வான் ஜுனாய்டிக்கு கடிதம் அனுப்பினார். சுங்கை பினாங்கு வெள்ள நிவாரண மேம்பாட்டுத் திட்ட இரண்டாவது கட்டத் திட்டத்தைத் தொடங்கும் பொருட்டு மாநில அரசு ஆற்றங்கறை ஓரங்களில் வாழும் மக்களை இடமாற்றம் செய்தனர். தற்போது மழைக்காலம் என்பதால் குறிப்பாக சுங்கை பினாங்கு பகுதிகளில் அதிகமான வெள்ளம் ஏற்படுகிறது. எனவே, சுங்கை பினாங்கு மேம்பாட்டுத் திட்ட நிதி ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன் வரவேண்டும் எனவும் கூட்டரசு அரசாங்கம் தனது வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என்றார்