கூட்டரசு அரசு வாக்குறுதி அளித்து பல ஆண்டுகள் உருண்டோடியும் இன்று வரை ஒரு யூனிட் பிரிமா மலிவு விலை வீடு கூட பினாங்கு மாநிலத்தில் கட்டப்படவில்லை. கடந்த 8/2/2014-ஆம் நாள் முன்னாள் பிரிமா திட்டத் தலைவரான அமரர் தான் ஶ்ரீ டாக்டர் ஜாமாலுடின் ஜர்ஜிஸ் கூடிய விரைவில் பினாங்கு மாநிலத்தில் பிரிமா மலிவு விலை வீடமைப்புத் திட்டத்திற்கான இடம் அடையாளங்காணப்படும் என்றார். அவர் மரணமடைந்தவுடன் தான் ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா பிரிமா திட்டத்தின் புதிய தலைவராகப் பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்டார்.
கூட்டரசு அரசாங்கம் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பினாங்கு மாநிலத்தில் 80,000 யூனிட் வீடுகள் ரிம1.3 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும் என அறிவித்தது. எனவே அந்த வாக்குறுதியை நடப்புத் தலைவரான தான் ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் டியோ.
மேலும், பினாங்கு மாநிலத்தில் கட்டப்படும் பிரிமா மலிவு விலை திட்டத்திற்கான இடம், மொத்த யூனிட்கள், திட்டமிடல் அங்கீகார காலக்கெடு, வீடமைப்புத் திட்டம் தொடங்கப்படும் காலக்கெடு ஆகிய விபரங்களை பினாங்கு அரசிடம் அறிவிக்குமாறு தான் ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா அவர்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டதாக திருஜெக்டிப் தெரிவித்தார். மலேசியாவிலே வரி செலுத்துவதில் மூன்றாவது இடத்தில் திகழும் பினாங்கு மாநில மக்களுக்குக் கூட்டரசு அரசாங்கம் பிரிமா மலிவு விலை திட்டத்தை உடனடியாகத் தொடங்க முற்பட வேண்டும் என்றார்.
பினாங்கு மாநில மேம்பாட்டாளர்களுக்கு மேம்பாட்டு உரிமம் மற்றும் விளம்பர அனுமதி பெருவதில் கால தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தெரிவிக்குமாறு நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி (KPKT) அமைச்சுவிடம் வினவப்பட்டுள்ளது. பினாங்கு மேம்பாட்டாளர்கள் முறையாக விண்ணப்பித்தும் அனுமதி வழகாதததற்குக் காரணம் இல்லை என்றும் பொதுவாகவே இரண்டு வாரத்தில் அனுமதி வழங்கப்படும் என எடுத்துரைத்தார் ரியல் எஸ்டேட் மற்றும் மலேசிய வீட்டு மேம்பாட்டு சங்க (ரேடா) தலைவர் டத்தோ ஜெரி சான். இப்பிரச்சனைக் குறிப்பாக பினாங்கு மேம்பாட்டாளர்கள் எதிர்நோக்குவதாகச் சாடினார். இதற்குக் கூட்டரசு அமைச்சு உடனடித் தீர்வுக் காண வேண்டும் என்றார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);