கோவிட்-19 தாக்கத்திலிருந்து மீட்சி பெற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.

Admin

ஜார்ச்டவுன் – கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பினாங்கு மாநில அரசிற்கு உதவிக்கரம் நீட்ட எம் சம்மிட் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனம் 20,000 முகக்கவசங்களை இம்மாநில பள்ளிகளுக்கு வழங்கும் நோக்கில் இன்று மாநில அரசிடம் ஒப்படைத்தது.

அதன் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான டத்தோ ஆல்பர்ட் மோ கூறுகையில், பினாங்கு மாநிலத்தில் அண்மையில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த பங்களிப்பு தக்க சமயத்தில் வழங்கப்படுகிறது, என்றார்.

“அனைவரும் ஒற்றுமையுடன் நின்று கோவிட்-19 தொற்றுநோய் வளவைத் தட்டையான முறையில் செயல்படுத்துவதற்கு இது ஒரு முக்கியமான தருணம்.

“ அடுத்த மாதம் இந்நிறுவனத்தின் 20-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு எங்கள் பெருநிறுவன சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்) திட்டத்தின் கீழ்
20,000 முகக் கவசங்கள் நன்கொடையாக வழங்கப்படுகிறது,” என எம்.சம்மிட் நிறுவன தோற்றுநருமான ஆல்பட் தெரிவித்தார்.

மாநிலத்தின் சார்பாக பொருட்களைப் பெற்ற மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், பினாங்கு வாழ் மக்களின் நல்வாழ்வை முன்னிலை படுத்தி உதவிக்கரம் நீட்டிய இந்நிறுவனத்தின் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தார்.

“தற்போது பினாங்கில் அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகளின் எண்னிக்கையால், அனைவரும் முகக் கவசங்கள் அணிவது அவசியம். அதேவேளையில், போதுமான அளவில் முகக் கவசங்கள் இருப்பு இருக்க வேண்டும் என்பதால் இந்த மதிப்புமிக்க பங்களிப்பு வழங்கியதற்கு இந்நிறுவனத்துக்கு மாநில அரசு நன்றி தெரிவிக்க விரும்புகிறது.

“தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தில் அரசுக்கு உதவ இன்னும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று பினாங்கு அரசாங்கம் நம்புகிறது”, என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அதுமட்டுமின்றி, வன்பொருள் நிறுவனமான ஜிங்ஸ்வே ஹார்டுவேர் டிரேடிங் செயின்ட் சேவியர் இடைநிலைப்பள்ளி மற்றும் மாநிலத்தின் ‘இ-கற்றல் கணினி திட்டத்திற்கு’ பங்களிக்க முன்வந்துள்ளது.

இந்நிறுவனம் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டிய பட்டறை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது, என்றார்.

“நாங்கள் மடிக்கணினிகளை மாநிலத்தின் ‘மின் கற்றல் கணினி திட்டத்திற்கு’ நன்கொடையாக வழங்கினோம்”, என கோய் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஆட்சிக்குழு உறுப்பினர்களான சோங் எங், பீ புன் போ மற்றும் இயோ சூன் இன் ஆகியோர் கலந்து கொண்டனர்.