சமத்துவ பொருளாதாரத் திட்டம் மக்களின் பொருளாதார ஏற்றத்திற்கு வித்திடும்

சட்டமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் திருமதி பஞ்சவர்ணத்திற்கு சமத்துவ பொருளாதாரத் திட்ட நிதியுதவி மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்
சட்டமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் திருமதி பஞ்சவர்ணத்திற்கு சமத்துவ பொருளாதாரத் திட்ட நிதியுதவி மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்

கம்போங் மெலாயு குடியிருப்புப் பகுதியை சார்ந்த 3 குடும்பங்களுக்கு சமத்துவ பொருளாதாரத் திட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் 21-ஆம் நாள் நிதியுதவி வழங்கினார் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய். 2013-ஆம் ஆண்டு மாநில முதல்வரால் துவக்கப்பட்ட இத்திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் பொது மக்களுக்கு உதவும் நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பல குடும்பங்கள் இத்திட்டத்தினால் நன்மை பெறுகின்றனர்.
மாநில அரசு இத்திட்டத்திற்கு பொது மக்களுக்கு ஏறக்குறைய
ரிம3.9மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. “நாங்கள் சமூகநலம் கொண்ட மாநில அரசு மற்றும் நிதியுதவி பெரும் பெறுநர்கள் சிறந்த வாழ்க்கை பெற உதவுகிறோம்” என சட்டமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் தெரிவித்தார். சமத்துவ பொருளாதாரத் திட்டத்தில் உதவி பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வருமான கணக்கறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் சிலர் பின்னாளில் கூடுதல் வருமானம் ஈட்டுவர், எனவே இந்த நிதியுதவி பிற குடும்பத்திற்கு வழங்கப்படும் என மாநில முதல்வரின் அரசியல் செயலாளராகத் திகழும் வோங் கூறினார்.
திருமதி பஞ்சவர்ணம், ஜாமிலா அப்துல் அக் மற்றும் கய்ரோன் பீ சி.கே மோசா ஆகியோர் இத்திட்டத்தில் நிதியுதவி பெறுகின்றனர். இம்மூவரும் நிதியுதவி வழங்கி பொருளாதாரத்தில் எதிர்நீச்சல் போட உதவிக்கரம் நீட்டிய மாநில அரசிற்கும் சட்டமன்ற உறுப்பினர் வோங்கிற்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் குறைந்த வருமானம் பெறுநர் குறிப்பாக மாதந்தோறும் ரிம790-க்கு குறைவாக பெறுநர்களை பொது மக்கள் மாநில அரசாங்கத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார். உதாரணமாக, ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரிம500-ஆக இருந்தால், மாநில அரசு கூடுதல் ரிம290 மாதந்தோறும் தொகையதிகரிப்புச் செய்யும்” என்றார். அனைத்துலக ரீதியில் வறுமை கோடாக ரிம790 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்