37-வது முறையாக தொண்டுள்ளம் கொண்ட டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் அவர் தம் நற்பணிக்குழுவினரும் வட செபராங் பிறை சமூகநலத்துறையும் இணைந்து ஏழை எளியோருக்கு பரிசுக்கூடை எடுத்து வழங்கினர். இந்த ஆண்டு ஏறக்குறைய 500 பல்லின ஏழை மக்களுக்கு பரிசுக்கூடை வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இந்நிகழ்வு ஶ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்களான லிம் ஹொக் செங் மற்றும் பீ புன் போ கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டத்தோஶ்ரீ அருணாசலம் ஏற்று நடத்தும் இன வேற்றுமை பாராத பல சமூக நிகழ்வுகளைக் கண்டு அகம் மகிழ்வதாகக் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். 37 ஆண்டுகளாக தொடர்ந்து தீபாவளி அன்பளிப்பு வழங்குவது எளிதான செயல் அல்ல, அதோடு அவரின் செயல்பாடு பாராட்டக்குரியது என வரவேற்புரையில் தெரிவித்தார்.
“நன்றி டத்தோஶ்ரீ ஆர்.அருணாசலம்” என பொது மக்கள் நிறைந்த சபையில் தெரிவித்தார் முதல்வர். ஆண்டுதோரும் நடைபெறும் இந்நிகழ்வில் அன்பளிப்பு பெற விருப்பும் வசதி குறைந்த பொது மக்கள் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் நற்பணிக்குழுவினருடன் தொடர்புக் கொள்ளலாம்.