சிறு, நடுத்தர வியாபாரிகள் முழு பி.கே.பி அமலாக்கத்திற்கு மறுப்பு

Admin

செபராங் ஜெயா- நமது நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி 3.0) அமலாக்கம் செய்த போதிலும் இன்று(20/5/2021)  பதிவு செய்யப்பட்ட 6,806 புதிய கோவிட் -19  வழக்குகள் வரலாற்றிலே மிக அதிகமான எண்ணிக்கையாக விளங்குகிறது. 

இதனை தொடர்ந்து பல தரப்பினர் கூட்டரசு அரசாங்கம் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த அமலாக்கத்தில் நீர், மின்சாரம், எரிசக்தி, தகவல் தொடர்பு, தபால், போக்குவரத்து, நீர்ப்பாசனம், எண்ணெய், எரிவாயு, எரிபொருள், நிதி, வங்கி, சுகாதாரம், மருந்தகம், பாதுகாப்பு, துப்புரவு பணி, மளிகை மற்றும் உணவகம் மட்டுமே பி.கே.பி 1.0 போல் செயல்பட வேண்டும் என முன்மொழிந்துள்ளனர்.  

இந்த விவகாரம் குறித்து முத்துச் செய்திகள் நாளிதழ் குழுவினர் பொதுமக்களின் கருத்துகளை பதிவு செய்தனர். வியாபாரிகள் தரப்பில் பெரும்பான்மையினர் முழு பி.கே.பி அமலாக்க செய்தால் மத்திய அரசு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், என தெரிவித்தனர். 

‘MATHY‘

முடித் திருத்தும் நிலைய உரிமையாளர் மதி,35 முழு பி.கே.பி அமலாக்கம் கண்டால் சிறு மற்றும் நடுத்தர வணிகம் மட்டும் மூட உத்தரவு விடக்கூடாது. மாறாக,   பெருநிறுவனங்கள் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறி  செயல்பட அனுமதி வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

“முழு பி.கே.பி அமலாக்கம் காண சிறு வணிகம் முதல் பெருநிறுவனங்கள் வரை செயல்பட அனுமதி வழங்கக்கூடாது.

“மத்திய அரசு சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை மட்டுமே மையமாகக் கொண்டு ஒவ்வொரு முறையும் மூட உத்தரவிடுவது  முறையல்ல, நாங்களும் சோறு தான் சாப்பிடுகிறோம், புற்கள் அல்ல,” என சூழுரைத்தார். 

பி.கே.பி1.0 அமலாக்கத்தால் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரிந்த திருமதி வசந்தி,34  தனது வேலை இழந்த தற்போது வீட்டில் இருந்து குடும்பத்தை பராமரித்து வருகிறார். 

” மேலும் பி.கே.பி அமலாக்கத்தால் சமூக நிகழ்ச்சிகளான திருமணம், நிச்சயம், திருமண விருந்தோம்பல் ஆகியவை தடை செய்யப்பட்டதால்   பகுதிநேரமாக அழகு ஒப்பனையாளராக செய்த வேலையும் தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகள் மூடப்பட்டதால் பிரத்தியேக வகுப்புகள் நடத்த பெற்றோர்கள் எதிர்நோக்கும் நிதி பிரச்சனை மற்றும் கோவிட்-19 தொற்று நோய் குறித்த அச்சம் நேரடி வகுப்புகளுக்கு நடத்த இணக்கம். தெரிவிக்க மறுக்கின்றனர்,” என பி.கே.பி அமலாக்கத்தால் தனது  வருமானத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் வசந்தி தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் கொண்டார்.

எனவே, முழு பி.கே.பி- க்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த அவர், மத்திய அரசு அமல்படுத்தப்பட்ட எஸ்.ஓ.பி-களை கடுமையாக்கினால் இந்த கோவிட்-19 வழக்கு பதிவுகளை குறைக்க முடியும், என்றார்.


“பி.கே.பி 1.0 போல் முழு பொருளாதார துறைகள் உட்பட அனைத்தும் முடக்கம் செய்தால் கோவிட்-19 வழக்குகளை கணிசமான முறையில் குறைக்க முடியும். இதன் மூலம் பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்,” என மளிகை கடையில் மேலாளராக பணிபுரியும் பிரியா,34 தெரிவித்தார்.

பொது மக்கள் சிறு பிள்ளைகளையும் பொது இடங்களுக்கு அழைத்து வருவதோடு எஸ்.ஓ.பி-களை முறையாக பின்பற்றாமையே இந்த தொடர் வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்வதாக கூறினார்.    

முழு பி.கே.பி அமலாக்கத்திற்கு தனது முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்.