ஜார்ச்டவுன் – கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டிய பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ்
நன்றிக் கூறினார்.
“சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான்கு சரக்கு லாரியில் அடிப்படைப் பொருட்கள்; படகுகள், தன்னார்வலர்கள் என தக்க சமயத்தில் உதவுகள் பெறப்பட்டது.
“பினாங்கு மாநில சுற்றுச்சூழல் மற்றும் சமூகநலன் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த உதவிகள் பெறப்பட்டன,” என்று சிலாங்கூர் சமூக பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் அலுவலகத்திற்கு
மரியாதை நிமித்தம் வருகை அளித்த போது இவ்வாறு கூறினார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் மாநில இரண்டாம் துணை பேராசிரியர் ப.இராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, I seed அமைப்பு தலைவர் டிக்காம் லூர்ட்ஸ் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
I-Seed எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில்முனைவர் மேம்பாட்டுத் திட்டம் பற்றி நேற்று நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் பினாங்கு மாநில அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் தங்கள் நிபுணத்துவம் மற்றும் விவரங்களைப் பகிர்ந்து கொண்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம்
இந்திய சமூக இலக்கு குழுவினரின் வருமானத்தை அதிகரிக்கவும் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகளில்
l-Seed திட்டமும் ஒன்றாகும்.
மாநில முதல்வர், கணபதிராவ் மற்றும் அவரது குழுவினரின் சிறப்பு வருகைக்கு நன்றித் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை பெருநிறுவனத் துறையின் பங்களிப்பு என்று அவர் கூறினார்.