சுங்கை பினாங்கு பொது வீடமைப்புப் பகுதியில் (பிபிஆர்) நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம். நிகழ்விற்கு வருகையளித்த பொது மக்களுக்கு பரிசுக்கூடை எடுத்து வழங்கினார்.
“தனது சட்டமன்ற தொகுதியில் திகழும் சமூக மற்றும் முன்னேற்றக் கழகம் பொது மக்களின் உடனடி தேவைகளுக்கு உதவிப்புரிவர்” என புகழாரம் சூட்டினார். மேலும் பொது மக்கள் மாநில அரசு வழங்கும் தங்கத் திட்டங்களில் பதிவுச் செய்து நன்மை பெறுமாறு வலியுறுத்தினார். பினாங்கு மாநிலத்திலே மிகவும் தூய்மையான பொது வீடமைப்பு இடமாக சுங்கை பினாங்கு பிபிஆர் தலம் விளங்குவது பாராட்டக்குறியது என்றார்.
முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் இலகுவாக வாழ்வதற்கு மாநில அரசு சுங்கை பினாங்கு பிபிஆர் தரை தலத்தில் அமைந்துள்ள சில வீடுகளை மறுசீரமைப்புச் செய்துள்ளது. இதனால் சக்கர நாற்காலி பயன்படுத்தும் திரு சுரேஸ் மிகுந்த மகிழ்ச்சிக் கொள்வதாகக் கூறினார்.