செந்துல் ஜெயா வெள்ள நிவாரணத் திட்டம் 2023, ஜனவரி நிறைவடைய இலக்கு – முதல்வர்

Admin
州政府积极舒缓水患问题。

புக்கிட் தெங்கா – மாநில அரசு வருங்காலத்தில் ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியைச் சுற்றி தற்போதுள்ள வெள்ள நிவாரணத் திட்டத்தை (RTB) மேம்படுத்த இணக்கம் கொண்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவிக்கையில், தாமான் செந்துல் ஜெயாவில் தற்போது வினாடிக்கு 500 கன மீட்டர் பம்ப் திறனை மேம்படுத்த செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) கிட்டத்தட்ட ரிம1 மில்லியனை நிதி ஒதுக்கியுள்ளதாக பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார். இத்திட்டம் ஜனவரி 2023 மத்தியில் நிறைவுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“நிச்சயமாக குடியிருப்பாளர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் திடீர் வெள்ளம் பிரச்சனையில் கவனம் செலுத்துவர். ஆனால், அதற்குத் தீர்வுக் காண்பது அவர்களின் பொறுப்பல்ல.

“மாநில அரசு தொடர்ந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண இணக்கம் கொள்ளும், குறிப்பாக திடீர் வெள்ளம் நிகழும்போது, அத்திட்டங்கள் மூலம் நாங்கள் ஒரு ஆய்வை நடத்தி, நடைமுறைப்படுத்தப்பட்டதில் எந்தெந்த இடங்களில் குறைபாடுகள் உள்ளன என்பதைக் கண்டறியப்படும்.

“ஆய்வு மேற்கொண்டதில், இந்த வெள்ள நிவாரணத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள பம்ப் போதுமான திறன் கொண்டு இருக்கவில்லை, எனவே நாம் கூடுதலாக ஒரு பம்ப்பை இணைக்க வேண்டும் அல்லது நகர்த்தக்கூடிய ஒரு பம்ப் இருக்க வேண்டும்,” என நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் தாமான் செந்தூல் ஜெயா பம்ப் ஹவுஸ்க்கு வருகையளித்தப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில், புக்கிட் தம்புன் மாநில சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக்; மத்திய செபராங் பிறை மாவட்ட அதிகாரி (SPT), கமருல் ஹைசல் கோடெரத், எம்.பி.எஸ்.பி உதவிப் பொறியாளர், அகமது அக்மல் அபு பக்கர் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தின் (PBT) பல கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

அதற்கு முன்னதாக, கொன் இயோவ், தாமான் மாங்கா பம்ப் ஹவுஸ்-க்குச் சென்று, அங்குள்ள பம்ப் ஹவுஸ் மற்றும் ‘பாரிட் ஐந்து’ கால்வாய் மேம்படுத்தும் திட்டம் முடிந்த பின்னரும் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சனை குறித்து இங்குள்ள குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், கொன் இயோவ் இன்று காலை தாமான் பாயு முத்தியாரா பொழுதுபோக்கு பகுதிக்கும் வருகை மேற்கொண்டார்.

இங்கு, புக்கிட் தெங்கா கிராம சமூக மேலாண்மை கழகத் (எம்.பி.கே.கே) தலைவர், டான் கீ ஹுவாட், 200 குடியிருப்பாளர்களின் நலனுக்காக, தற்போதுள்ள பொழுதுபோக்கு பூங்காவை பொது ‘ரோலர் ஸ்கேட்டிங்’ மைதானமாக மேம்படுத்த வேண்டும் என்று மாநில முதல்வரிடம் பரிந்துரைத்தார்.

மேலும் மாநில முதல்வர், ஆங் சான் கிங் சமூகநல கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார், இது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை இலவச ஆலோசனை சேவைகளை வழங்கியது.

“இந்த கிளினிக் அடுத்த ஆண்டு, பிப்ரவரி,10 முதல் மீண்டும் செயல்பாடுக் காண இலக்கு கொண்டிருப்பதால், மாநில அரசு போதுமான உதவிகளை நல்கும்,” என்று பொது மக்களில் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

左起:陈奕阀、吴俊益、曹观友等人巡视洪山宫施医赠药服务中心。