செபராங் பிறையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா இயற்கைக்காட்சிகள் நிறைந்தது

Admin
img 20240503 wa0086

 

ஜுரு – செபராங் பிறை அதன் மாவட்டங்கள் முழுவதும் சுற்றுச்சூழல்-சுற்றுலாவினை மேம்படுத்தும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வடக்கு முதல் தெற்கு வரை பல்வேறு இயற்கை நிலப்பரப்புகளையும் ஈர்ப்புகளையும் கொண்டிருக்கிறது.

பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் ‘ஜெலாஜா ❤️ பினாங்கு’ திட்டத்தின் பகுதியான ஜூரு ஆட்டோ சிட்டியில் அமைந்திருக்கும் சுற்றுச்சூழல் பூங்கா தளத்திற்கு இன்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ்
வருகையளித்தபோது
இவ்வாறு கூறினார்.

மாநில முதலமைச்சருடன், புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ்-லியோங் மற்றும் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக் ஆகியோர் இருந்தனர்.

“இன்று பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பல இடங்களைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.

“ஜுரு ஆட்டோ சிட்டியின் முன்முயற்சியான இந்த தளத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக இப்போது ஜூரு ஆட்டோ சிட்டி சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வருகையளித்தோம்.

“ஜூரு ஆட்டோ சிட்டி எப்பொழுதும் செபராங் பிறை மாநகர் கழகத்திற்கும் (எம்.பி.எஸ்.பி) மாநில அரசாங்கத்திற்கும் பசுமை முன்முயற்சிகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஒரு பிரதான ஒருங்கிணைப்பாக இருந்து வருகிறது,” என்று சாவ் கூறினார்.

இயற்கை வளங்களின் பயன்பாடு, மறுசுழற்சி நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஜூரு ஆட்டோ சிட்டி
மேற்கொண்டதாக சாவ் கூறினார்.

“சுங்கை ஜூரு நதி சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

“தனியார் துறைக்கும் மாநில அரசுக்கும் இடையிலான கூட்டாண்மை பலனளித்து, இப்போது ஒரு புதிய சுற்றுச்சூழல் சுற்றுலா தளத்தை உருவாக்கியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று சாவ் கூறினார்.

பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ், மாநில அரசின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் தனியார் துறையின் ஈடுபாடு முக்கியமானது என்றும், ஜூரு ஆட்டோ சிட்டி சுற்றுச்சூழல் பூங்கா தளம் இதற்குச் சான்றாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.

“பல மேம்பாட்டாளர்கள் செபராங் பிறையில் வடக்கிலிருந்து தெற்கு வரை ‘சுற்றுச்சூழல் சுற்றுலா’ என்ற அடிப்படையைப் பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும் நான் நம்புகிறேன்.

செபராங் பிறையில் கம்போங் அகோங், பெனாகாவில் உள்ள சதுப்புநிலக் காடுகள் மற்றும் சுங்கை மூடா ஆற்றங்கரையில் உள்ள பல இடங்கள் என சுற்றுலாத் தளங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

“இது தவிர, ஆயிர் ஈத்தாம் டாலாம் காடு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள பழத்தோட்டம் மற்றும் புக்கிட் தம்புனில் உள்ள மீன்பிடி கிராமம் ஆகியவை ஜூரு ஆட்டோ சிட்டியில் சுற்றுச்சூழல் பூங்கா உட்பட சுற்றுச்சூழல் சுற்றுலா முயற்சிகளாகக் காணப்படுகின்றன.

இதற்கிடையில், ஜுரு ஆட்டோ சிட்டி நிறுவனர் கேரி தியோ கூறுகையில், அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இப்பகுதியில் சுற்றுச்சூழல் உயிரினங்கள் குறித்த ஆய்வு நடத்தப்படும் என்றும், அதன்பிறகு உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.