11 மில்லியன் செலவில் கட்டப்பட்ட செபராங் பிறை அரேனா (ஸ்பா) பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் மற்றுமொரு சமூகநல திட்டமாக திகழ்கிறது என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இத்திட்டம் நவீன மண்டபம், விளையாட்டு அரங்கம் மற்றும் சந்திப்புக் கூட்ட அறை ஆகியவை உள்ளடக்கியுள்ளன. செபராங் பிறை பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கட்டப்பட்ட இத்திட்டம் 6.9ஏக்கர் நிலப்பரப்பில்அ அமைந்துள்ளதோடு 491 வாகன நிறுத்துமிடம் உட்பட கட்டப்பட்டுள்ளன .
இந்த நவீன மண்டபத்தில் குளிரூட்டி பொருத்தப்பட்டதோடு 1000 பேர் பயன்படுத்தக்கூடிய அளவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது . பண்டார் செபராங் ஜெயா வீடமைப்புத் திட்டங்கள், பொது வசதிகள், பேரங்காடிகள் , கேளிக்கை மையங்கள் மட்டுமின்றி இந்த ஸ்பா திட்டமும் பொது மக்களுக்கு பல நன்மைகள் அளிக்கும் என்றார் மாநில முதல்வர். அனைத்துலக தரம் கொண்ட இந்த ஸ்பா திட்டம் செபராங் பிறையில் நிறுவப்பட்டுள்ளதை எண்ணி பெருமிதம் கொள்வதாக முதல்வர் கூறினார்.
செபராங் பிறை அரேனா திட்டத்தை பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்காத போதிலும் அவர் பொது மக்களுக்கு ஆற்றிய சேவைக்குக் கிடைத்த அங்கீகாராம் என்றார் மாநில முதல்வர். இத்திட்டம் மாநில அரசின் மேம்ப்பாட்டிற்குச் சான்றாக அமைகிறது.
பல ஆண்டுகளாக பினாங்கு மேம்பாட்டுக் கழகம் சமூகநல திட்டங்கள் குறிப்பாக மலிவு விலை வீடமைப்புத் திட்டம், உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள், இயற்கையை வளப்படுத்தும் பசுமைத் திட்டங்கள் மற்றும் பல திட்டங்கள் மேற்கொண்டு பினாங்கு மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தூண்டுகோளாக விளங்குகிறது என ஸ்பா திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த முதல்வர் கூறினார்.
இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஶ்ரீ ரஷிட் பின் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.if (document.currentScript) {