செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலம் திறப்பு விழாக் கண்டது

Admin

பிறை – அண்மையில் செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலகத்தை பினாங்கு வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் பிறை, மோகா மோல் பேராங்காடியின் 2-வது மாடியில் திறப்பு விழாக் கண்டது.

இந்நிகழ்ச்சி இறை வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து, பின்னர் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு மற்றும் வருகையளித்த பிரமுகர்கள் இணைந்து குத்து விளக்கு ஏற்றித் தொடக்கி வைத்தனர்.

இந்தியர்களின் நலன் பாதுகாக்க துடிப்பு மிகுந்த தலைவர்கள் வேண்டும். எனவே, டத்தோஸ்ரீ சுந்தராஜூ சமுதாயத்தின் குரலாக இருப்பார் என தலைமையுரையாற்றிய பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் கணேசன் ஆறுமுகம் நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டுறவு அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு தமது சிறப்புரையில் இந்தியர்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், சுயத் தொழிலில் ஈடுப்படும் தரப்பினர் அத்தொழிலைப் பற்றி நன்கு அறிந்து ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும், சமயம் மற்றும் தமிழ்மொழி சார்ந்த விகாரங்களை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்க முடியாது. அதேவேளையில் அதனைப் பாதுகாப்பது நமது கடமை என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழகத் தலைவர் கணேசன் ஆறுமுகம், துணை தலைவர் டத்தோ மரியதாஸ் கோபால், பினாங்கு இந்தியர்கள் நலன் விவகார அதிகாரி டத்தோ மு.இராமசந்திரன், செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் பொண்ணுதுரை மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பல உள்ளூர் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டு இந்தக் கூட்டுறவுக் கழகம் மேற்கொண்ட முன்முயற்சிக்குப் பாராட்டுத்
தெரிவித்தனர்.

“புதியதாகத் திறப்பு விழாக் கண்ட செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலகம் தங்கள் உறுப்பினர்களின் மற்றும் சமுதாய நலனில் மிகுந்த அக்கரை கொண்ட தலமாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

“அவர்களின் எதிர்கால முயற்சிகள் பிறை சமூகத்தின் நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் சாதகமாகப் பங்களிக்கட்டும், என்றார்.