லிப் சின் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழகம் மற்றும் பத்து உபான் சட்டமன்ற முயற்சியில் வயோதியான 73 வயது மதிக்கத்தக்க சே பீயா அசீஸ் மூதாட்டிக்கும் மற்றும் உடல் ஊனமுற்றோரான அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் அடையாள அட்டையும் உடல் ஊனமுற்றோருக்கான அட்டையும் எடுத்து வழங்கினார் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயபாலன்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இம்மூன்று குடும்ப உறுப்பினர்களையும் வெவ்வேறு ஆதரவற்ற இல்லங்களுக்கு அனுப்ப மாநில சமூக நலத்துறையின் உதவுயுடன் இடமாற்றப்படவுள்ளதாகக் கூறினார். இம்மூவரின் அன்றாட வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக உள்ளதாகவும் இவர்களின் பாதுகாப்பில் அக்கறையுள்ளதால் இத்திட்டத்தை கையாளவிருப்பதாக மேலும் விவரித்தார்