சௌராஸ்தா சந்தையை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளப்பட்டிருக்கும் வேளையில் அதன் கட்டுமான பணிகள் 91% நிறைவடைந்துள்ளது என முத்துச்செய்தி நாளிதழ் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இச்சந்தை பழைய தோற்றம் மாறாமல் புதுப்பொழிவுடன் திகழ அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, இக்கட்டுமானப் பணி அச்சந்தை வியாபாரிகளை பாதிக்கவில்லை என்பது சால்சிறந்தது. வியாபாரிகள் வழக்கம்போல் வியாபாரத்தை நடத்த ஏதுவாக உள்ளது. இப்புதிய சந்தை மின்சார படிகள், பல்நோக்கு வாகனம் நிறுத்தும் வசதி, சிறுகடைகள் என பல வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டது பாராட்டக்குரியதாகும்.