ஜாலான் டத்தோ ஹாஜி அகமது படாவி கால்வாய் மேம்படுத்தப்பட்டுள்ளது

Admin
c721e660 a16c 4bc7 8bbe b5f98a08827b

பெர்தாம் – ஜாலான் டத்தோ ஹாஜி அகமது படாவிக்கு அருகில் 1.2m X 1.2m கல்வெட்டுடன் 241 மீட்டர் (மீ) நீளமுள்ள வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி, ரிம272,000 செலவில் பினாங்கு மாநிலத்தின் பொதுப்பணித் துறையால் (JKR) கடந்த டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டுள்ளது.

 

உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி, இன்று இங்கு மேம்பாட்டுப் பணிகள் நிறைவுப்பெற்ற இடத்தை நேரில் சென்று  பார்வையிட்ட பிறகு இதைத் தெரிவித்தார்.

 

“இம்மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்வதற்கு முன்பு, ஒரு மணி நேரத்துலோ அல்லது அதற்கும் குறைவாகவோ மழை பெய்தால், , இந்த பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்படும். நீண்ட நாட்களாக இப்பகுதியில் கட்டமைப்பு சிக்கல்களால் வெள்ளம் நிகழ்கிறது.

 

“இன்று, வணிகர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டோம், திடீர் வெள்ளம் பிரச்சனையை களையப்பட்டுள்ளது,” என்று தஞ்சோங் புங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் இதனைச் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

 

மேலும், இதற்கு முன்னர் இங்குள்ள அனைத்து வியாபாரிகளும் எதிர்கொண்ட வடிகால் பிரச்சனையை எடுத்துரைத்த முதலமைச்சரின் சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி லேய் ஹொக் பெங்கிற்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹாக் பெங், முதல்வர் நிர்வாகத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மாநில அரசு, கிராமப்புறங்களில், குறிப்பாக கெபாலா பத்தாஸ் மற்றும் தாசெக் குலுகோர் நாடாளுமன்றங்களில் உள்கட்டமைப்புப் பிரச்சனைகள் செவ்வென தீர்வுக்கண்டு வருகின்றது.