பத்து காவான் – தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் முன்னணி உலகளாவிய விநியோக நிறுவனமான Bosch தனது குறைக்கடத்தி சோதனை மையத்தை இன்று பத்து காவான் தொழிற்பேட்டையில் (BKIP) அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
பினாங்கில் உள்ள இந்த நிறுவனம் ஆசியாவின் மிகவும் மேம்படுத்தப்பட்ட குறைக்கடத்தி சோதனை மையங்களில்
ஒன்றாகும்.
1972 முதல் பினாங்கில் மூன்று Bosch உற்பத்தி ஆலைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகமும் உள்ளன.
2030 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் புதிய மேம்பாட்டுத் திட்டத்திற்காக சுமார் 350 மில்லியன் யூரோக்கள் (ரிம1.62 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளதாக Bosch மொபிலிட்டி துறை வாரிய உறுப்பினர் கிளாஸ் மேடர் கூறினார்.
“தொடக்கத்தில், இந்நிறுவனம் உலகளாவிய சிப் தேவையைப் பூர்த்தி செய்ய அதன் குறைக்கடத்தி வணிகம் மற்றும் உற்பத்தி துறையை முறையாக வலுப்படுத்தியது.
“Bosch நிறுவனத்தின் அனைத்து வணிகப் பகுதிகளின் வெற்றிக்கும் குறைக்கடத்திகள் தயாரிப்பு முக்கியமானதாக அமைகிறது.
“எனவே, பினாங்கில் மொபிட்டி துறையில் எங்களின் வளர்ச்சியின் பிரதான வியூகத் திட்டமாக குறைக்கடத்தி சோதனை மையம் திகழ்கிறது. எனவே, செமிகண்டக்டர்களுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப விநியோகத்தையும் அதிகரிக்கிறோம்,” என்று கிலாவுஸ் தனது உரையில் கூறினார்.
கிளாஸின் கூற்றுப்படி, உயர் மட்ட குறைக்கடத்தி திறன் மற்றும் திறன் மிக்க பணியாளர்கள் கிடைக்கப்பெறுவதால் இந்நிறுவனம் பினாங்கில் முதலீடு செய்கிறது.
“வணிக கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அருகாமையில் இருப்பதனால் ‘சிப்’-களுக்கான விநியோகத்தின் நேரங்களையும் தூரத்தையும் குறைக்க முடிகிறது.
“100,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட பினாங்கு நிறுவனத்தில், ஜெர்மனியின் டிரெஸ்டனில் உள்ள Bosch’s fab இல் தயாரிக்கப்பட்ட ‘சிப்’-களின் இறுதி சோதனைக்கு உட்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.
“நாங்கள் உள்ளூர் குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் விரிவுபடுத்துகிறோம் மற்றும் எங்கள் 100வது ஆண்டு கொண்டாட்டத்தின் மத்தியில் மலேசியாவில் எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறோம்.
இதற்கிடையில், பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் தொழிற்பேட்டையில் நான்காவது Bosch’s குறைக்கடத்தி ஆலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பராமரிப்பு அரசாங்க முதலமைச்சருமான மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
“பினாங்கில் உள்ள இந்த நவீன வசதி, ‘automotive’ துறையில் கடுமையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை Bosch கொண்டுள்ளதாக, நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்நிறுவனம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது.
“எனவே, வாகன குறைக்கடத்தி துறையில் மாநிலத்தின் பொறியியல் நிபுணத்துவத்தை வலுப்படுத்த Bosch இன் முதலீட்டுத் திட்டத்தில் நம்பிக்கை கொள்கிறேன்,” என்று சாவ் கூறினார்.
இந்த நிறுவனத்தின் முதலீடு உள்ளூர் விநியோகச் சங்கிலிக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு உள்ளூர் திறமையாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது, என்றார்.
InvestPenang மற்றும் பிற தொடர்புடைய மாநில ஏஜென்சிகள் மூலம், முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வசதிகள் மற்றும் மிகுந்த ஆதரவை வழங்குவதற்கு மாநில அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று சாவ் மேலும் கூறினார்.
“மேலும், நாங்கள் பினாங்கின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். மேலும், எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் திறமை மிக்க மனித வளத்தை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (மிடா), இன்வெஸ்ட்பினாங்கு மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதற்கும் திட்டச் செயலாக்கங்களை எளிதாக்குவதற்கும் அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கும் சாவ் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“இந்த நெருங்கிய உறவைப் பேணுவதற்கும், பினாங்கின் துடிப்பான மின் மற்றும் மின்னணுவியல் (E&E) சுற்றுச்சூழல் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கும், கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற நமது அந்தஸ்தை நிலைநிறுத்துவதற்கும், மலேசியாவிற்கு நன்மை பயக்கும் பொருளாதாரத் திட்டங்களை உறுதி செய்வதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்று சாவ் குறிப்பிட்டார்.