ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதி ஆலயங்களுக்கு நிதியுதவி

Admin
img 20241005 wa0130

ஜெலுத்தோங் – அண்மையில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் இடம்பெறும் தேவி ஶ்ரீ முத்து மாரியம்மன் மற்றும் சடா முனீஸ்வரன் ஆலத்திற்கும் ஶ்ரீ இராமர் ஆலத்திற்கும் நிதியுதவி வழங்கப்பட்டது.

img 20241005 wa0131
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் ஶ்ரீ இராமர் ஆலயத்திற்கு ரிம25,000 நிதிக்கான மாதிரி காசோலையை ஆலயத் தலைவரிடம் வழங்கப்பட்டது (உடன் முன்னாள் மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்களான டாக்டர் லிங்கேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் குமரன் மற்றும் சங்கர்).

ஜார்ச்டவுனில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ முத்து மாரியம்மன் மற்றும் சடா முனீஸ்வரன் ஆலத்தியத்தின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் திருப்பணிக்காக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ்.என் இராயர் ரிம50,000 வழங்கினார்.

அன்றையத் தினத்தன்று, ஶ்ரீ இராமர் ஆலயத்தின் வருடாந்திர புரட்டாசி மாதக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிம25,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது.

“ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் இயங்கும் இந்து ஆலயங்கள் மட்டுமின்றி பினாங்கு மாநிலத்தில் இடம்பெறும் ஆலயங்கள் பராமரிப்பிலும் கவனம் செலத்துப்படுகிறது,” என பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்.எஸ்.என் இராயர் தெரிவித்தார்.

“புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெறும். இந்த ஆண்டின் புரட்டாசி மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகளுடன் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் ஏறக்குறைய 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எனவே, இந்தப் புரட்டாசி மாதப் பூஜைகள் சிறப்பாக நடைப்பெற நிதியுதவி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ்.என் இராயர் அவர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன் என ஆலயத் தலைவர் வில்லாந்திரன் கூறினார்.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவி ஶ்ரீ முத்து மாரியம்மன் மற்றும் சடா முனீஸ்வரன் ஆலயத்தைப் புணரமைப்புச் செய்து வர்ணம் தீட்டி திருப்பணி வேலைகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கிய ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் அவர்களுக்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளோம். இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் திரு சண்முகநாதன் தெரிவித்தார். குறுகியக் காலக்கட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீடு வழங்க முன் வந்த இராயர் அவர்களின் சேவையைப் பாராட்ட வேண்டும், என
நிர்வாகத்தின் சார்பாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், இரண்டாம் துணை முதலமைச்சர் ஜெக்தீப் சிங் டியோ, முன்னாள் மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்களான டாக்டர் லிங்கேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் குமரன் மற்றும் சங்கர் கலந்து கொண்டனர்.