பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்துள்ளது. மலேசியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் பினாங்கு மாநிலத்தில் மட்டும் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்துள்ளன என அண்மையில் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட புள்ளி விபரப்படி இவ்வாண்டு தொடங்கி ஆகஸ்டு வரை 2005 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என புக்கிட் மெர்தாஜாம் மைடின் பேரங்காடியில் நடைபெற்ற டிங்கி விழிப்புணர்வு கார்னிவல் நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழிற்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் ஆரோக்கியச் சேவை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபீப் பஹாருடின்.
டிங்கி காய்ச்சல் சம்பவங்களில் பினாங்கு மாநிலத்தில் கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு பதினொன்று இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையை இன்னும் கட்டுப்பாட்டில் கொண்டுவர COMBI(Communication for Behavioural impact) எனும் தன்னார்வ படையினரின் பங்களிப்பினை டிங்கி காய்ச்சல் ஒழிக்கும் திட்டத்தில் அளப்பரியது என்றார். பொது மக்கள், பொது இயக்கங்களுடன் ஒன்றிணைந்து தத்தம் ஆங்கங்கே சுத்தம் செய்தல், விழிப்புணர்வு கருத்தரங்கு, நேரடியாக பொதுமக்களிடம் அறிவிப்பு விடுத்ததன் விளைவாக டிங்கி காய்ச்சலை முற்றாக குறைக்க இயலும் என மேலும் குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர்.
தற்போது பினாங்கு மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ள அடிப்படை கழிவுகளில் இருந்து தனிமைப்படுத்தும் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என தமதுரையில் குறிப்பிட்டார் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப். இத்திட்டத்தில் பொது மக்கள் நெகிழிப்பை, அலுமினிய டின்கள், பொத்தல்கள் என பிரித்து எடுத்து வீசுவதால் நீர் தேங்கி நிற்கும் அபாயம் இல்லை என குறிப்பிட்டார். இதன்வழி டிங்கி கொசு பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);