பினாங்கு மாநில தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஶ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் திருக்குறள் சொற்பொழிவு, 2014-ஆம் ஆண்டின் சிறந்த யூ.பி.எஸ்.ஆர் மாணவர் பரிசளிப்பு நிகழ்வு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட துணை முதல்வர் அவர்கள் உலகத்திலேயே மிகவும் தொண்மையானது தமிழ்மொழி என்றும் நூல்களில் சிறந்தது திருக்குறள் என்றும் தமதுரையில் சித்தரித்தார். திருக்குறளை ஆரம்பப்பள்ளியிலே பயிலும் மாணவர்கள் அதன் சிறப்பு பண்புகளைப் பின்பற்ற வேண்டும். அதோடு நன்னெறி நூலாகக் கருதப்படும் திருக்குறள் உலகின் தலை சிறந்த நூல் என்பதில் மாற்று கருத்தில்லை என்றார். அதனைக் கற்று தெளிந்து சிறந்த மனிதர்களாக வாழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, சிறப்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் செ.குணாளன் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் தம் சங்கத்திற்குப் பேராதரவு வழங்கி வருவதை பாராட்டினார். 38 ஆண்டுகள் வரலாற்றை பெற்ற சங்கம் பல நல்ல திட்டங்களில் செயல்பட்டு வருவதாகவும் பள்ளி மாணவர்கள் கல்வி நிதியுதவி, மருத்துவச் செலவு இன்னும் பல தேவைகளைப் பூர்த்திச்செய்து வருவதாகக் குறிப்பிட்டார். திருக்குறளின் பெருமைகளை மாணவர்களிடையே தெளிவுப் பெற வைக்கவும் தூண்டுகோலாக விளங்கவும் இந்நிகழ்வினை ஏற்பாடுச் செய்திருந்ததாகக் கூறினார்.
சிறப்பு பிரமுகர்கள் 2014-ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);