திறந்த இல்ல கொண்டாட்டம் பொது மக்கள் மற்றும் மாநில அரசாங்கத்தின் ஒற்றுமையை வளர்க்கிறது – கொன் இயோவ்

Admin
219a6cad 5207 470c 996e 52518150e8b3

 

 

பந்தாய் ஜெராஜாக் – பல்வேறு பின்னணியில் இருந்து சுமார் 10,000 பொது மக்கள் முதலமைச்சரின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர்.

இக்கொண்டாட்டத்தில் மாநில ஆளுநர் (TYT), துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோ புவான் கத்தீஜா முகமது நோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“இம்மாதிரியான திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் பினாங்கு மக்கள் வெளிப்படுத்தும் உற்சாகமானது இந்த மாநிலத்தில் இனங்களுக்கிடையில் பராமரிக்கப்படும் நல்லிணக்கத்தை வலுப்பெற செய்கிறது என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு
கூறினார்.

“கடந்த ஆண்டுகளில் திறந்த இல்ல உபசரிப்புக் கொண்டாட்டம், இந்த மாநிலத்தில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு சேர்கிறது.

“இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. எனவே, இன்றைய திறந்த இல்ல உபசரிப்பு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ஒரு விழாவாக பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.

மேலும், மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்; மாநில அரசு செயலாளர், டத்தோ சுல்கிஃப்லி லாங்; மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்; பினாங்கு மாநகர் கழக மேயர் (எம்.பி.பி.பி), டத்தோ Ir.இராஜேந்திரன் மற்றும் மாநில மற்றும் மத்திய துறைகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

img 20250130 wa0145

தொடக்க நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் அஹ்மத் ஃபுஸி, முதலமைச்சர் மற்றும் கௌரவ விருந்தினர்கள் ஆகியோர் பிரதான மேசையில் ‘லோர் சாங்’ விழாவை நிறைவுச் செய்தனர்.

அதே நேரத்தில், சிங்க நடனம் போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளுடன் விழாவும் அலங்கரிக்கப்பட்டது; Euphoria குழுவின் நவீன நடனம்; பினாங்கு பில்ஹார்மோனிக் இசைக்குழு (PPO) படைப்பு; சிறப்பு குழந்தைகளின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய மேளம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

8af6833d 1233 414d 8a0d 6e424c1d5e19

இந்த விழாவின் முடிவில், சமூகநல இல்லங்களின் பிரதிநிதிகள் மற்றும் குழந்தைகளுக்கு ‘பண்டிகை பணம்’ கொன் இயோவ் மற்றும் அவரது மனைவி பொற்கரத்தால் வழங்கப்பட்டது.