தேசிய வங்கி மலிவு வீடுகள் வாங்குபவரின் கடன் நிபந்தனைகளை எளிதாக்க வேண்டும் – திரு.ஜெக்டிப்

பினாங்கு மாநில அரசு 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மலிவுவிலை வீடமைப்பு திட்டத்தின் கீழ் தற்போது பன்னிரண்டு வீடமைப்புத் திட்டங்களில் 22,512 வீடுகள் கட்டப்படவுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. எனினும், தற்போது முதல்முறையாக வீடு வாங்க விண்ணப்பிப்பவர்கள் அதற்கான கடனுதவி கிடைக்காமல் நிராகரிக்கப்படுவதாகக் கூறினார். இப்பிரச்சனையைக் களைய தேசிய வங்கி ஆளுநர் டான் ஸ்ரீ ஜெத்தி அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிய கடிதத்தின் விளைவாக அவரின் துணை அதிகாரியைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வங்கிகளின் கடனுதவிப் பெறும் நிபந்தனைகளுக்கு ஏற்ப புதிய மலிவு விலை வீடுகளின் விண்ணப்ப நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாத வருமானமாக தத்தம் ரிம 2,500, ரிம 3,500, ரிம 6,000, ரிம 8,000, ரிம 10,000, ரிம 12,000 பெறும் விண்ணப்பதாரர்கள் ரிம42,000, ரிம72,500, ரிம150,000, ரிம200,000, ரிம300,000, ரிம400,000 மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்புதிய நிபந்தனைகளின் மூலம் வங்கிகளில் வீட்டுக் கடனுதவிப் பெற இலகுவாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர்.
இதனிடையே, பினாங்கில் உள்ள குறிப்பிட்ட மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களில் 30% மேம்பாட்டாளர்கள் திறந்த விற்பனையில் வீடுகளை விற்கலாம். வட மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட விலையை விட 10% அதிகமாக விற்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பினாங்கு வாக்காளராக இருப்பது அவசியமாகும்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ
d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);