பினாங்கு மாநில அரசு பத்து மாவுங் வட்டாரத்தில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய நிலப்பிரச்சனைக்குத் தீர்வுக் கண்டது. இதன் சம்மந்தமாக பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹஜி அப்துல் மாலிக் பின் அப்துல் காசிம் அவர்களிடம் இந்த ஆலய தலைவர் திரு.கந்தசாமி பல வருடங்களாக முறையீடுச் செய்துள்ளார். தாமான் இபினில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலயம் அவ்வட்டார மேம்பாடுக் காரணமாக பல இன்னல்களைச் சந்தித்துள்ளன.
பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியில் தேவி ஶ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலயத்திற்கு 5,000 சதுர அடி நிலத்தை மாநில அரசு வழங்கியுள்ளது என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பினாங்கு மாநில அரசு பினாங்கு வாழ் மக்களின் அனைத்து மதங்களின் சமயம் மற்றும் கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என மேலும் விவரித்தார். இதனிடையே, இப்பிரச்சனைக்குப் பல ஆண்டுகளாக முழு மூச்சாக தீர்வுக்காணப் பாடுப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக்கொண்டார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி பினாங்கில் உள்ள ஆலயங்கள் மற்றும் இடுகாடு பிரச்சனைகளுக்கு இந்து அறப்பணி வாரியத்தின் உதவியை நாட தயங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்தியர்களின் பிரச்சனைக்கு என்றும் செவி சாய்க்கும் என்றும் சூளுரைத்தார். மேலும், இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உபகாரச் சம்பளம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் இந்து அறப்பணி வாரிய நிர்வாக தலைமை அதிகாரி திரு.இராமசந்திரன், செயலாளர் திரு.சுரேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.} else {