2015-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டனர். இவர்கள் 1 ஜனவரி 2014 முதல் 31 டிசம்பர் 2015 வரை நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். பினாங்கு மாநிலத்தில் இயங்கும் இரண்டு நகராண்மைக் கழகத்திலும் முறையே 24 பேர் உறுப்பினர்களாகப் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர்.
செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் கடந்த 7/1/2015-ஆம் நாள் அக்கழக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட 24 உறுப்பினர்களில் நால்வர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் முறையே திரு மு.சத்திஸ், திரு டேவிட் மார்ஷல், திரு அ.தியாகராஜன் மற்றும் திரு கோ.ராஜசேகர். இந்த பதவிப்பிரமான நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு கையொப்பமிட்டனர்.
செபராங் பிறை நகராண்மைக் கழகம் கடந்த 2014-ஆம் ஆண்டு பல சாதனைகள் புரிந்துள்ளன என்பது வெள்ளிடைமலையே. இக்கழகத்திற்கு பசுமை நகரம் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் ரிம2,000, 4 நட்சத்திர விருது, சிறந்த நகரம் விருது, மக்கள் பங்கேற்கும் சிறந்த செயல்முறை விருது எனப் பல விருதுகள் பெற்று பினாங்கு மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கப்பட்டுள்ளன என எடுத்துரைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். கடந்த 2011-ஆம் ஆண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தனியார்மயப்படுத்தப்பட்ட வேளையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் கைப்பற்றியது. இதனால் செபராங் பிறை நகராண்மைக் கழகத்திற்கு 50% செலவினங்கள் கூடுதலாக அதிகரித்தாலும் மலேசிய குடிமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறினார் மாநில முதல்வர். எனவே, தலைவர் டத்தோ மைமுனா அவர்களின் தலைமைத்துவத்தில் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் நிகழ்வு கடந்த 8/1/2015-ஆம் நாள் பாடாங் கோத்தா நகராண்மைக் கழக அரங்கில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட 24 உறுப்பினர்களில் நால்வர் இந்தியர்கள் என்பது சாலச்சிறந்தது. அவர்கள் முறையே திரு ஆ.குமரேசன், திரு ஹர்விந்தர், திரு ச.சுகுமார் மற்றும் திரு ஜோ.பிரான்சிஸ். இந்த பதவிப்பிரமான நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், பினாங்கு நகராண்மைக் கழக தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு நியமனக் கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை (CAT) எனும் கொள்கையைப் பின்பற்றி பினாங்கு நகராண்மைக் கழகம் 2008-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் வருமானத்தைச் சித்தரிக்கின்றது.
இக்கழகம் வருமான அடிப்படையினான பட்ஜேட் வரையறுத்து மக்களுக்கு சிறந்த சேவை வழங்குவது பாராட்டக்குறியது என்றார் மாநில முதல்வர். கூடுதல் வருமானத்தைக் கொண்டு பத்து பிரிங்கி பகுதியில் சந்தை நிறுவப்பட்டது என்பது சாலச்சிறந்தது.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);