ஜார்ச்டவுன் – பினாங்கு, இராமகிருஷ்ணன் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய தேசிய இராணுவத்தின் (INA) 80வது ஆண்டு நினைவு விழாவில், ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தலைமைப் பண்புகள்
இந்தியாவை ஒருங்கிணைக்கத் துணைபுரிந்தது என எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து மாநில வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநில இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், மலேசியாவுக்கான இந்திய துணை உயர் ஆணையர் சுபாஷினி நாராயணன், நேதாஜி சமூகநல அறக்கட்டளை தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் விளக்கேற்றினர்.
முதலமைச்சர் தனது உரையில், நேதாஜியின் எழுச்சி நாள் கொண்டாட்டத்தை பினாங்கில் கொண்டாடியதற்கு நேதாஜி சமூகநல அறக்கட்டளை (NWF) மற்றும் Pertubuhan Membina Kapasiti dan Intelek Sosial, Malaysia (Pemkis) ஆகியோருக்கு நன்றித் தெரிவித்தார்.
பின்னர் அவர் Pemkis சங்கத்திற்கு
ரிம20,000 நன்கொடை வழங்கினார், அதே வேளையில், நேதாஜி சமூகநல அறக்கட்டளை (NWF) Pemkis சங்கத்திற்கு ரிம7,500 நன்கொடை வழங்கியது. மேலும், ஆர்.எஸ்.என் இராயர், நேதாஜி சமூகநல அறக்கட்டளைக்கு (NWF) ரிம10,000 வழங்கினார்.
இந்த வரலாற்று நிகழ்ச்சி இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் மிக்க வரலாற்றை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அது பினாங்கு2030 இலக்கின் முன்முயற்சியில் பொதிந்துள்ள அரசின் திட்டங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, என்றார்.
“வரலாறு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட இந்த மாநிலத்தில், இந்திய தேசிய இராணுவ வரலாறு மற்றும் பினாங்கு2030 இலக்கு பொதுவான முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
“எங்கள் பினாங்கு2030 இலக்கானது, அனைத்து குடிமக்களும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், செழித்து வளரக்கூடிய மற்றும் நமது அன்புக்குரிய மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் செழுமைக்குப் பங்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எவ்வாறு இந்தியா நாட்டிற்கு சுதந்திரம் பெறும் முயற்சியில் பல்வேறு பின்னணியில் உள்ள தனிநபர்களை ஒன்றிணைத்தாரோ, அதேபோல் பினாங்கு2030 இலக்கானது, மக்களின் பிறப்பிடம் எதுவாக இருந்தாலும், செழிப்பான மற்றும் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்ற மிக்க சமூகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.
“நமது பன்முக கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதற்கும் அது வலிமையின் ஆதாரமாக பயன்படுத்துவதற்கும் இது நம்மை ஊக்குவிக்கிறது” என்று சாவ் கூறினார்.
நேதாஜியின் பயணத்தையும் தலைமைத்துவத்தையும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் அரசாங்க கொள்கைகள் மற்றும் பண்புகளையும் தமிழ்ப்பள்ளிகளின் வகுப்பறைகளில் டீச் மலேசியா டீச் திட்டத்தின் மூலம் கொண்டு வருவதற்கான அதன் முயற்சியும் குறிப்பிடத்தக்கது என்றும் சாவ் கூறினார்.
இந்த முயற்சியானது நமது வருங்காலத் தலைவர்களுக்குத் தரமான கல்வியைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைவர்களாக ஆவதற்குத் தேவையான திறன்களையும் மனப்பான்மையையும் மேம்படுத்துகிறது, என்றார்.
இது மலேசியாவில் உள்ள விளிம்புநிலைக் குழுக்களுக்கும் சர்வதேச தரமான கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மறைந்த நேதாஜி அவர்கள், சீக்கியர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற அனைத்து இன மக்களையும் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஒன்றிணைத்த விதம் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக திகழ்கிறது, என்று இராயர் கூறினார்.
“மலேசியாவின் முன்னேற்றத்திற்கு பல்லின மக்களின் ஒற்றுமை மிக முக்கியமாக அமைகிறது. நாம் ஒருவருக்கொருவர் அரவணைத்து, மலேசியா நாடனாது, அனைவருக்குமான இடமாகத் திகழ வேண்டும்,” என்று இராயர் வலியுறுத்தினார்.
நான் அரசியலுக்கு வந்தபோது வலிமையான பண்புகளைக் கொண்ட
ஜெலுத்தோங் புலி என்று அழைக்கப்படும் மறைந்த கர்பால் சிங்,
எனது ஆசிரியராகவும்,
டான்ஸ்ரீ லிம் கிட் சியாங் புகழ் பெற்ற மற்றொரு அரசியல்வாதியாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்,21 அன்று இந்திய தேசிய இராணுவத்தின்
எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அந்நிகழ்ச்சியில் நேதாஜி சமூகநல அறக்கட்டளை மூலம் 150 மாணவர்களுக்கு தலா 50 ரிங்கிட் வழங்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் அறிவித்தார்