புக்கிட் மெர்தாஜாம் – தாசெக் குளுகோர், பாடாங் செம்படாக் பகுதியில் உள்ள 1.4 ஏக்கர் நிலத்தை பசுமை கல்வி மையமாக மேம்படுத்தப்படும்.
செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் கூறுகையில், இந்த பசுமை திட்டம் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் , உர்பநேஸ்ட் சென்.பெர்ஹாட் நிறுவனம் மற்றும் மாநகர் கழகம் ஆகிய மூன்று தரப்பினர் ஒத்துழைப்பில் இத்திட்டம் மலர்ந்துள்ளது என்றார்.
செபராங பிறை மாநகர கழக தலைவர் மேயர் டத்தோ ரோசாலி மாமுட், இப்பசுமை திட்டம் ரிம300,000 நிதி ஒதுக்கீட்டில் இவ்வாண்டு ஜுன் மாதம் நிறைவுப்பெறும் என்றார்.
“இந்த பசுமைக் கல்வி மையம் சமூக வேளாண்மை, மேம்பாடு & மறுசுழற்சி நடவடிக்கைகள் மற்றும் கரிமக் கழிவுகள் கொண்டு உரம் தயாரித்தல் போன்ற பல்வேறு பசுமைத் திட்டங்களுக்கான ஆராய்ச்சி மையமாக செயல்படும்.
“அக்வாபோனிக்ஸ்(aquaponics)
ஃபெர்டிகேஷன்(fertigation), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ ஓ.தி) (Internet of Things (IoT)
மற்றும் பல கூறுகள் அடிப்படையில் இந்த மையம் உருவாக்கப்படும்.
“இந்த திட்டம் தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்கும் பினாங்கு2030 இலக்கிற்கு ஏற்ப அமைந்துள்ளது என ரோசாலி எம்.பி.பி.பி வளாகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கூறினார்.
இந்த பல்கலைக்கழக துணைவேந்தர் (மாணவர் விவகாரங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழுத் தலைவர்) பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அமீன் முகமட் தாஃப் மற்றும் நகர்ப்புற தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் குணசேகரன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டு முயற்சியின் மூலம் பொது மக்கள் வகுப்புகள், பயிற்சி பட்டறைகள், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை போன்றவற்றில் பங்கேற்று நன்மைகளை பெறுவர், என ரோசாலி கூறினார்.
“பசுமை கல்வி மையத்தில் வழங்கப்படும் திட்டங்கள் அல்லது பயிற்சிகள் மூலம், சமூகத்தில் இளைஞர்கள் ஒரு வெற்றிகரமான நகர்ப்புற விவசாயியாக உருமாற்றம் காண ஊக்குவிக்கும்,” என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.