பசுமை நிறைந்த பினாங்கு மாநிலம்

2008-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தை மக்கள் கூட்டணி அரசு கைப்பற்றியப் பின் பொருளாதாரத்துறையில் பல மேம்பாடு அடைந்து வருவதோடு மட்டுமின்றி சுற்றுச்சூழலை பசுமையாகப் பாதுகாக்க தவறியதில்லை. அவ்வகையில் மாநில அரசு பினாங்கு பசுமை கழகத்திற்கு ரிம650,000-ஐ மானியமாக வழங்கி சுற்றுச்சூழலை பேணுவதை உறுதிச்செய்கிறது.

ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் பினாங்கு பசுமைக் கழகத்தின் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் பினாங்கு பசுமைக் கழகத்தின் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

பினாங்கு பசுமைக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் நடத்தி பினாங்கு வாழ் மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வை வலுப்படுத்துகிறது. பினாங்கு மக்களிடையே பசுமை கலாச்சாரத்தை உருவாக்குவதோடு அதனை நடைமுறை படுத்த பசுமைக் கழகம் வழி வகுக்கிறது. பினாங்கு மாநிலத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்த கூடுதல் வளங்கள் மற்றும் தாவரங்கள் இல்லாத போதிலும் மாநில அரசு மக்கள் வளம்பெற “சிறந்து விளங்கு, மாற்றம் செய்” என்ற சுலோகம் பிரசங்கிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் பசுமையான சூழலில் வாழ்வதை உறுதிப்படுத்துகிறது.
பினாங்கு பசுமை புத்துருவாக்க ஊக்கத்தொகை, பினாங்கு பசுமை அலுவலகம், பினாங்கு மழைநீர் அறுவடை ஊக்கத்தொகை, பசுமை விருதளிப்பு விழா ஆகிய நிகழ்வுகள் பினாங்கு மாநிலத்தில் பசுமையானச் சூழலை உருவாக்கவும் மேம்படுத்தவும் வித்திடுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு மானியம் வழங்குவது வெள்ளிடைமலையாகும்.
இந்நிகழ்விற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா பிந்தி இஸ்மாயில், பினாங்கு நீர் விநியோக நிறுவனத் தலைவர் பொறியியலாளர் ஜாசானி மைடின்சா மற்றும் பலர் வருகைப் புரிந்தனர்.
பினாங்கு பசுமைக் கழகம் நடத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் , பங்கேற்கவும் 04-2503321/2- தொலைப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளவும் அல்லது www.pgc.com.myஅகப்பக்கத்தை வலம் வரவும்.