மாநில அரசு டிஜிட்டல் கல்வி துறையை மேம்படுத்த “ஸ்தேம்” எனும் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) அடிப்படையில் பினாங்கு மாநிலத்தை உருமாற்றுச் செய்கிறது. மாநிலத்தில் டிஜிட்டல் நூல்நிலையம், பினாங்கு அறிவியல் காபே, பினாங்கு தெக் டோம், ஜெர்மன் தொழிற்பயிற்சி கல்வி என பல அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சகாப்தம் உருவாக்கப்படுகிறது என சட்டமன்றத்தில் வழங்கிய தொகுப்புரையில் குறிப்பிட்டார் மாநில முதல்வர் லிம் குவான் எங்.
2017-ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் மாநில அரசு அலுவலகம் மற்றும் அரசு செயலகம் பிரிவுக்கு கடந்த ஆண்டு காட்டிலும் ரிம546.02 லட்சம் கூடுதாக ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. மாநில முதல்வர் இந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரிம609 லட்சம் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திடமும் (பிடிசி), ரிம30.35 லட்சம் பினாங்கு நீர் வாரியத்திடமும் கடனுதவியாக வழங்கப்படும் என எடுத்துரைத்தார். பொதுவாகவே மாநில சட்டரீதியான அமைப்புகளுக்கு கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்கீடு கோரப்படும். எனினும் உலக பொருளாதார தாக்கத்தினால் கூட்டரசு அரசும் பண நெருக்கடி எதிர்நோக்குவதால் இந்த கடனுதவித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றார். இந்த இரு வாரியத்திடமும் நிதி கடனுதவி வழங்குவதால் நிதி அபாயம் ஏற்படாது, அதேவேளையில் மாநில அரசாங்கத்திற்கு 2018-ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுக்கு கடனுதவிப் பணம் மற்றும் இலாப தொகையும் பெறப்படும் .
பினாங்கு நீர் விநியோக வாரியம்(பிபிஏ), மூல நீர் பெறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ரிம76.22 லட்சம் மாநில அரசாங்கத்திற்கு கட்டணமாக செலுத்துகிறது. இந்நிதி மாநில மேம்பாட்டுக் கூட்டமைப்புப் பிரிவின் கீழ் சேமி
க்கப்பட்டு மாநில மேம்பாட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.