பட்டர்வோர்த் ஜாலான் சீராம் மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பமானது.

பினாங்கு மாநில அரசு மக்களின் நலனுக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் பட்டர்வோர்த் ஜாலான் சீராம் மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் துவக்க விழாக்கண்டது. இம்மேம்பாட்டுத் திட்டம் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு, பொதுப்பணித் துறை, வட மாவட்டம் மற்றும் நிலம் அலுவலகம், மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக ஒத்துழைப்புடன் அமலுக்கு வருகிறது.

பட்டர்வோர்த் ஜாலான் சீராம் சாலை மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்
பட்டர்வோர்த் ஜாலான் சீராம் சாலை மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்

பினாங்கு மாநில அரசு கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்திற்காக இவ்வாண்டு வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டில் ரிம32.7 மில்லியன் ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளதைச் செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மேலும், ஆறு சாலை விரிவாக்கம், சாலை சீரமைப்பு மற்றும் வடிகாலமைப்பு மேம்படுத்தும் திட்டங்களுக்காக ரிம86.3 மில்லியன் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

பட்டர்வோர்த் ஜாலான் சீராம் மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் கடந்த 9 மே 2014 தொடங்கி 9 ஏப்ரல் 2015-ல் முடிவடையும். மாநில அரசு பிரிமா தனியார் நிறுவன (ADZ Prima Sdn. Bhd)ஒப்பந்ததாரரை நிர்ணயித்துள்ளது. இத்திட்டம் Butterworth Outer Ring Road (BORR) துவங்கி ஜாலான் சுங்கை ஞியோர் முதல் ஜாலான் தெலாகா ஆயிர் – ஜாலான் ராஜா ஊடா வரை மேம்பாடுக் காண்கிறது. இத்திட்டத்தில் இருவழி சாலைகளை நான்கு பாதைகளாக அதாவது இருவழியிலும் இரண்டு வழி பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு ரிம4.29 மில்லியன் ஒதுக்கீட்டுள்ளது. . இத்திட்டத்தின் வழி பொதுமக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசல் களையப்படுவதோடு வியாபார வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும். இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரனும் கலந்து சிறப்பித்தார்.

பட்டர்வோர்த் ஜாலான் சீராம் சாலை மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்ட மாதிரி வரைப்படம்.
பட்டர்வோர்த் ஜாலான் சீராம் சாலை மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்ட மாதிரி வரைப்படம்.
}