அமெனிதிக் நிறுவனம் பினாங்கு மாநில பத்து காவான் தொழிற்துறை பகுதியில் நிறுவும் பொருட்டு அடிக்கல் நாட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அமெனிதிக் நிறுவனத் தலைமை நிர்வாக இயக்குநர் பிறையன் கொன்கெனன் மற்றும் மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் ஆகியோர் கையொப்பமிட்டு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
அமெனிதிக் நிறுவனம் என்பது மருத்துவ சாதனங்கள் அதாவது மருத்துவ நுகர்பொருட்கள், செல் காப்பு, இரத்த சுத்திகரிப்பு சாதனம் மற்றும் மருத்துவமனை தீர்வுகளை வழங்கும்
தலைச்சிறந்த மேலாண்மை நிறுவனமாகத் திகழ்கிறது.
பினாங்கு மாநில மையல்கற்களாக அமையும் இந்த நிறுவனம் 12.26 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ளது. எனவே 700 உள்நாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பது திண்ணம். இதன் மூலம் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் அமெனிதிக் நிறுவனம் உள்நாட்டு தொழிலாளர்களைத் தொழிற்திறன் மிக்கவர்களாக உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைகிறது.
இந்நிகழ்வில் பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை இயக்குநர் டத்தோ ரொஸ்லி ஜாபார், பினாங்கு மாநில முதலீட்டு இயக்குநர் லூ லீ லியன், செபெராங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் மைமுனா பின்தி முகமது ஷரிப் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து இகோதோரியல் தங்கும் விடுதியில் நடைபெற்ற விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட மாநில முதல்வர் வரவேற்புரையாற்றினார்.