பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துவரும் மீனவ சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் கூட்டணி அரசு என்றும் தவறியதில்லை. இவர்களின் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து மாநில அரசு பல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பது வெள்ளிடைமலை.
மக்கள் கூட்டணி அரசு பத்து காவான் வட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு புதிய படகுத் துறைமுகம் நிர்மானிக்க ரிம 120,000 மானியம் ஒதுகிட்டுள்ளது. இம்மீனவர்கள் தங்கள் படகுகளைப்[ பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைக்க இப்படகுத் துறைமுகம் சிறந்த தளமாக விளங்கும் என இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள இடத்திற்கு வருகை மேற்கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். இவருடன் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு லாவ் சூ கியாங் நிர்மானிப்புத் தளத்தைப் பார்வையிட வந்திருந்தார். இப்புதிய படகுத் துறைமுகம் பத்து காவான் மற்றும் செபெராங் ஜயா வட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும் என திரு லாவ் நம்பிக்கை தெரிவித்தார். 30 ஆண்டு காலமாக மீனவத் தொழிலில் ஈடுபட்டுவரும் இவ்வட்டார மீனவர்களுக்கு இத்துறைமுகம் புதிய மாற்றத்தையளித்து தங்கள் வாழ்வவதாரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படகுத் துறைமுகம் நிர்மாணிப்புப் பணி இன்னும் சில மாதங்களில் முழுமை பெறும்.
படகுத் துறை முகம் அமைக்கப்படவுள்ள தலத்தைப் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி (நடுவில்) புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு லாவ் சூ கியாங் (அவர் அருகில்), ஆகியோர் சுற்றுவட்டார மக்களுடன் பார்வையிடுகின்றனர்.