மருத்துவ சாதனங்களையும் மற்றும் கருவிகள் உற்பத்தியில் 45 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற பரமிட் தனியார் நிறுவனத்தின் (Paramit Malaysia Sdn Bhd) புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிறுவனம் பினாங்கில் உற்பத்தி துறையில் பல துரித வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை பரமிட் தனியார் நிறுவனம் ரிம 60 மில்லியனை பினாங்கில் முதலீடு செய்திருப்பதை தமது சிறப்புரையில் சுட்டிக் காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள். அதோடு, பினாங்கு மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி துறையில் 2013-ஆம் ஆண்டை காட்டிலும் 2014-ஆம் ஆண்டு ரிம 8.2 பில்லியன் முதலீடு அதிகரித்துள்ளது. மலேசியாவில் ஜோகூர் மற்றும் சரவாக் மாநிலங்களை அடுத்து பினாங்கு மாநில முதலீடு செய்ய சிறந்த மாநிலமாக கருதப்படுவதை சுட்டிக் காட்டினார். ஏழு ஆண்டுகளில் (2008-2014) பினாங்கில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 93.6% அதிகரித்துள்ளது; அதாவது ரிம 48.2 பில்லியன் ஆகும். பினாங்கு மாநிலம் முதலீடு செய்யவும் சுற்றுப்பயணிகளுக்கும் சிறந்த சுற்றுலா தளம் என தமதுரையில் கூறினார் மாநில முதல்வர் அவர்கள்.
மலேசியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தலைசிறந்த மின்சார மற்றும் மின்னணு நிறுவனங்கள் மூலம்
25% பொருட்களை உலகம் முழுவதும் பினாங்கில் இருந்து அனுப்பப்படுவதை பினாங்கில் முதலீடு அதுகரித்துள்ளதன் மீல உறுதிப்படுத்தப்படிகிறது. பினாங்கு மாநில உற்பத்தி மற்றும் சேவைகளின் வழி 2014-ஆம் ஆண்டு 95% பங்களிப்பு வழங்கி ஒரு முழுமையாக தொழில்மயமான மாநில இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்புதிய கட்டிடம் நிறுவப்படுவதன் மூலம் 500 இருந்து 800 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது பாராட்டக்குரியதாகும். இளைய தலைமுறையினருக்கு பினாங்கு மாநிலம் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.